விஜய்க்கு 18% வாக்கு வங்கி.. அதிமுகவை பின்னுக்கு தள்ளும் தவெக.. பிரவீன் சக்ரவர்த்தி சொன்ன டேட்டா!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக தவெக வளர்ந்துவிட்டதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, தனித்து போட்டியிட்டால் 17 முதல் 18 சதவிகித வாக்குகளை கைப்பற்றுவார் என்றும் கணித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவார் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். ஏற்கனவே கரூர் விவகாரத்திற்கு பின் தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து ஆலோசனை செய்திருந்தார். இதன்பின் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களையும் பேசி வருகிறார்.

அண்மையில் விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட போது, "சட்டசபைத் தேர்தலுக்கான விசில் அடிச்சாச்சு" என்று பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டிருந்தார். இதனால் தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமை திமுக உடனான கூட்டணியை தொடர விரும்புவதாக தெரிய வந்தது.
இதனால் விஜய்யும் சூசகமாகவே தவெக தனித்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பிரவீன் சக்ரவர்த்தி பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக போட்டியிட்டால் 17 முதல் 18 சதவிகித வாக்குகளை கைப்பற்றும்.
தமிழ்நாட்டின் 3வது அரசியல் சக்தி தமிழக வெற்றிக் கழகம் தான். விஜய்யை மக்கள் அங்கீகரித்துவிட்டனர். கூட்டணி இல்லாமல் தவெக தனித்துப் போட்டியிட்டால் கூட தவெக வலுவாக உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக அதிக வாக்குகளை பெறும். விஜய்க்கு வீட்டு ஒரு வாக்கு இருப்பதாக நினைக்கிறேன்.
இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் தவெகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்களின் வளர்ச்சி பாராட்டத்தக்கது. விஜய்க்கு வாக்கு அளிப்பீர்களா என்று தான் கருத்துக்கணிப்பில் கேட்பார்கள். விஜய் படம் பார்ப்பீர்களா என்று கேட்பதில்லை. வாக்காளார்கள் தெளிவாக விஜய்க்கு வாக்களிப்போம் என்கிறார்கள். மக்கள் விஜய்யை அரசியல்வாதியாக பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications