ஜனநாயகன் வரவரைக்கும்.. கூட்டணி பற்றி வெளியே சொல்ல வேண்டாம்.. விஜய் எடுத்த.. பயங்கர முடிவு?
சென்னை: ஜனநாயகன் படம் வெளியே வரும் வரை தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலைப்பாடுகள் பற்றி முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் வசூலை கூட்டணி முடிவுகள் பாதிக்க கூடாது என்பதால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக.கூறப்படுகிறது .
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தற்போது மீண்டும் திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார். 2026-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'ஜனநாயகன்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது., 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் வரை பல விளம்பர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கரூர் சம்பவம் - ஜனநாயகன்
சமீபத்தில் கரூரில் நடந்த சோக நிகழ்வு காரணமாக, 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தனி சந்திப்பை நடத்தினார். கட்சி வட்டாரங்களின்படி, மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஊடகங்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
கரூர் இரங்கல் தெரிவித்த விஜய்
அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK), இந்தச் சந்திப்புக்காக ஒரு ரிசார்ட்டில் 50 அறைகளை முன்பதிவு செய்திருந்தது. இதன் மூலம் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 37 குடும்பங்கள் இந்தச் சந்திப்புக்காக அழைத்து வரப்பட்டிருந்தன. விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இன்னொரு பக்கம் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். பாஜக உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக - தவெக கூட்டணி உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது. 50+ தொகுதிகள், துணை முதல்வர் வேட்பாளர் பதவி ஆகியவற்றை கொடுக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஜனநாயகன் படம் வெளியே வரும் வரை தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலைப்பாடுகள் பற்றி முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் வசூலை கூட்டணி முடிவுகள் பாதிக்க கூடாது என்பதால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக.கூறப்படுகிறது .
பாஜகவுடன் ஒருவேளை கூட்டணி அறிவித்து.. அது மக்கள் இடையே வரவேற்பை பெறாமல் போனால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும். அது ஜனநாயகன் வசூலை பாதிக்கும். தனது கடைசி படம் என்று கருதப்படும் படத்திற்கு பெரிய சிக்கல் ஆகும். இதை தவிர்க்கவே விஜய் ஜனவரிக்கு பின் கூட்டணி முடிவை அறிவிக்கலாம் என்று இருக்கிறாராம்.
ஜனநாயகன் விஜய்
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, விஜய் தற்போது 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராகி வருகிறார். இத்தனை நாட்கள் கரூர் விவகாரம் காரணமாக ஜனநாயகன் பட ப்ரமோஷன் தொடங்காமல் இருந்தது. தற்போது அந்த பணிகள் தொடங்க உள்ளன.
இத்திரைப்படம் அவரது நடிப்பு வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் ஒரு முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. அவரின் கடைசி படம் என்று ஜனநாயகன் திரைப்படம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
'ஜனநாயகன்' படக்குழு, நவம்பர் மாத தொடக்கத்தில் முதல் பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், வலுவான ப்ரோமோஷன் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகு, டீசர் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி, அவரது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
விஜய்க்கு பறக்கும் கோரிக்கை
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.
அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு!












Click it and Unblock the Notifications