ராஜராஜசோழன் செய்த அதே சம்பவம்.. விஜய் ஜெயிப்பார்.. ஜாதகம் சொல்லும் ரகசியம்.. பிரபல ஜோசியர் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஜாதகப்படி நான் சொல்கிறேன். இந்த கேமில் அவர் வென்றுவிடுவார். இந்த தேர்தலில் கண்டிப்பாக அவர் ஜெயிப்பார். ஸ்டாலின் ஜெயிக்க மாட்டார். நான் என் விருப்பப்படி சொல்லவில்லை. நான் கணித்தபடி சொல்கிறேன். விஜய்தான் முதல்வர்.. விஜய்தான் ஆளும் கட்சி என்று தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்துள்ளது. நிறைய கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.

கணிப்புகளுக்கு இடையே ஒன்இந்தியாவிற்கு தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் அளித்துள்ள பேட்டியில் விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து பேசி உள்ளார். அதில், நான் அதிமுக , திமுகவினர் சார்ந்த அனைவருடனும் பழகி வருகிறேன். அவர்கள் என்னிடம் ஒரு சவால் வைத்தனர். அதில்.. நீங்கள் யாருடனும் கூட்டணி வைக்க முடியாது என்றார்கள். நான் அரசியலுக்கு புதியவர்கள். நாங்கள் மதச்சார்பற்றவர்கள். எங்களுடைய, காங்கிரஸ் கட்சியின் கொள்கை ஒன்று. நாங்கள் ஜாதி, மதம் பார்க்க கூடியவர்கள். காங்கிரஸ் கொள்கை இதுதான். திராவிட சித்தாந்தம் இதுதான். பெரிதாக இதற்கெல்லாம் வேறுபாடும் இல்லை. நாங்கள் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கலாம்.. அது நடக்கவில்லை.

TVK Vijay will win for sure says his party astrologer Radhan Pandit Vetrivel

எங்களுக்கு நேரம் இல்லை. நாங்கள் நினைத்ததை இதில் அடைய வேண்டும். நாங்கள் முதல் தேர்தலிலேயே வென்று வர வேண்டும். எங்களால் கட்சியை முறையாக கட்டமைக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் மக்களை சென்று சேர்வோம். இப்போது அதுதானே முக்கியம். நாங்கள் வெற்றிபெற வேண்டும். வெற்றிபெற்றால் முழுமையாக கட்டமைப்பு எங்களுக்கு உருவாகிவிடும்.

தலைவர் விஜய்க்கான ஆதரவு சுனாமி போல உள்ளது. சுனாமி வருவதை கூட கணிக்கலாம். ஆனால் விஜய்க்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை கணிக்க முடியாது. அந்த அளவிற்கு அவருக்கு ஆதரவு உள்ளது. ஒவ்வொரு ஏரியாவிலும் மிக அதிக அளவில் ஆதரவு உள்ளது. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விஜய்க்கு ஆதரவு உள்ளது. தேர்தல் முடிவு வரும் போது முடிவு தெரியும். அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு மிக அதிகமாக இருக்கும்.

விஜய் தீவிர முருக பக்தர். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. திருப்பதி கோவில் போல தமிழ்நாடு முழுக்க அவர் கோவில்களை உலக தரத்திற்கு கொண்டு செல்வார். அவர் மதச்சார்பின்மை இன்றி நிறைய சேவைகளை செய்வார். ஜோசியராக சொல்கிறேன். அவர் அழகாக வென்று வந்துவிடுவார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாம் ஜோசியத்தை பின்பற்றி இருக்கிறார்கள். நான் சொல்வது ஜோதிட கணிதம். அதன்படி அவர் அழகாக வென்றுவந்து விடுவார்.

2021ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று நான் வீடியோ போட்டேன். கொடநாட்டில் இருந்தபடியே நான் வீடியோ போட்டேன். எடப்பாடி எப்போது ஜெயிக்க மாட்டார் என்று வீடியோ போட்டேன். விஜய் ஜாதகப்படி நான் சொல்கிறேன். இந்த கேமில் அவர் வென்றுவிடுவார். இந்த தேர்தலில் கண்டிப்பாக அவர் ஜெயிப்பார். ஜெயலலிதா 2016ல் வெல்ல மாட்டார் என்று கூறினேன். அதை மீறி செயல்பட கூடாது. இயற்கையை மீறி செயல்பட கூடாது.

அப்படி செய்தால் நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என்று கூறினேன். அதன்படியே நடந்தது. நான் கணக்குப்படி நான் சொல்கிறேன். ஸ்டாலின் ஜெயிக்க மாட்டார். நான் என் விருப்பப்படி சொல்லவில்லை. நான் கணித்தபடி சொல்கிறேன். விஜய்தான் முதல்வர்.. விஜய்தான் ஆளும் கட்சி, என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் முழு பேட்டியை இங்கே காணலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+