அரசியலில் “அண்ணா” பாதை? திமுக, அதிமுக வழியில் நடைபோடும் தவெக தலைவர் விஜய்! ட்வீட்டை பார்த்தீங்களா?
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்ணா தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்துள்ளார். "சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. 'மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளில், ஆற்றிய பணிகளை போற்றி மகிழ்வோம்" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார் விஜய்.
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா சிலைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார். தவெக நிர்வாகிகள் பலரும் அண்ணா பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தி உள்ளனர்.

1967ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆட்சியை இன்று வரை எவராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. அண்ணாவுக்குப் பின்னால் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு திமுக, அதிமுக என மாறி மாறி திராவிட இயக்கங்களின் ஆட்சியே அரை நூற்றாண்டைக் கடந்து தமிழ்நாட்டில் திகழ்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் அரசியல் பிரவேசம் கண்டுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறார். விஜய்யின் அரசியல் பாதை எப்படி இருக்கும் என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் மாலை சூட்டி, திமுக, அதிமுகவின் அரசியல் பாதையையே பின்பற்ற இருப்பதாக மறைமுகமாக தெரிவித்திருக்கிறாரா விஜய் என விவாதங்கள் கிளம்பி உள்ளன.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications