விசில் படை இன்று சென்னையில் கூடுகிறது.. விஜய்யின் அடுத்த பிளான் இதுதானா? சென்னையை குறிவைக்கும் தவெக
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர். அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இன்றைய தினம் நடைபெற உள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம், இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது... அரசியலில் களம் இறங்கியிருக்கும் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வும், தமிழக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

தன்னுடைய கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இன்று சென்னையில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று செயல்வீரர்கள் கூட்டம்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் முறைகள், தேர்தல் களத்தில் கையாள வேண்டிய வியூகங்கள் மற்றும் கட்சி அமைப்பை அடிமட்டம் வரை பலப்படுத்துவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்தக் கூட்டமானது ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட செயல்வீரர்களுக்காகவே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "28.01.2026, புதன்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
முன்னதாக, ஜனவரி 25ம் தேதி விஜய் தலைமையில் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் சின்னமான 'விசில்' சின்னம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்த மாவட்ட ரீதியிலான கூட்டம் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவது மற்றும் வாக்காளர்களைச் சந்திக்கும் முறைகள் குறித்து இந்த கூட்டத்தில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது..
அதேபோல கட்சியின் அடையாளமான விசில் சின்னத்தை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்தும் இதில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களைத் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட வைப்பதே தவெக தலைமையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. சென்னை போன்ற முக்கிய பகுதிகளில் கட்சியின் வலிமையை நிரூபிக்க இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் - விசில் பிரச்சாரம்
இதனிடையே மற்றொரு விஷயமும் தவெகவுக்குள் புதிதாக ஆரம்பமாகி உள்ளது.. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரக் குழுவை விஜய் அமைத்திருந்தார். கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இன்று முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் குழுவின் பிரச்சாரம் தொடங்க உள்ளது.. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் மற்றும் தேர்தல் சின்னம் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக முன்கூட்டியே பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்?












Click it and Unblock the Notifications