விஜய்யும் சரி.. தவெகவும் சரி.. அதை மட்டும் செய்யவே மாட்டோம்.. ஆதவ் அர்ஜுனா பரபர பேச்சு
சென்னை: கூடிய விரைவில் தலைவரின் பிரச்சாரம் தொடங்கும். ஈரோட்டில் நடந்தது மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், திமுக, அதிமுக, பாஜக என எல்லா கட்சியிலும் அந்த கட்சி நிர்வாகியின் வீட்டில் இருக்கும் பெண்கள், மகன்கள், மகள்கள் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள். 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்றும் கூறினார்.
இதேபோன்று சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் தொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜுனா, "எங்க தலைவரும் சரி, கட்சியும் சரி யாருக்கும் அடி பணிந்ததாக வரலாறு கிடையாது.. மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். அது தான் வரலாறாக மாறும்.." என்று கூறினார்.

ஆதவ் அர்ஜுனா பேட்டி
2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆனால் இந்த தேர்தல் தான் இலக்கு என்று கூறிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமைதியாக இருப்பதாக அந்த கட்சி தொண்டர்களே ஏமாற்றத்தில் இருந்ததாக கூறி வருகிறார்கள். ஈரோடு மக்கள் சந்திப்பு, கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு வேறு எந்த மக்கள் சந்திப்பும் இல்லாமல் இருப்பது அவர்களது தொண்டர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இதற்கு இடையே தான் அதிமுக பாஜக கூட்டணிக்குள் டிடிவி தினகரன் இணைந்துள்ளார். இதேபோன்று திமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இணைந்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கட்சிகள் விஜய்யின் தவெக பக்கம் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் இது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
எல்லா கட்சிகளின் வீடுகளிலும்
எஸ்.ஐ.ஆர் பணியின் போது எங்களது பூத் நிர்வாக அதிகாரிகள், ஒன்றிய, கிளை செயலாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தனர். இதில் இருந்து வந்த தகவல் என்ன என்று பார்த்தால்.. பொதுவாக ஒரு வீடை எடுத்துக்கொண்டால் இது திமுக நிர்வாகி வீடு, இது அதிமுக நிர்வாகி வீடு.. இது பாஜக நிர்வாகியின் வீடு என்று தான் சொல்வார்கள். ஆனால் இப்போ கள நிலவரத்தை பார்த்தீங்க என்றால்
திமுக நிர்வாகி வீட்டிலும் தவெகவுக்கு ஓட்டு போடுகின்றவர்கள் இருக்காங்க.. இதேபோன்று அதிமுக நிர்வாகி வீட்டில் பார்த்தோம் என்றால் அங்கும் தவெகவிற்கு ஓட்டு போடுகின்றவர்கள் இருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளின் வீடுகளிலும் தவெகவினர் இருக்கிறார்கள். மக்கள் எங்களோட இருக்கிறார்கள். நீங்க உருவாக்குகின்ற கூட்டணிகள் எல்லாம் எப்படி இருக்கின்றது என்றால், உடம்பு இருக்கிறது. முகம் இல்லை.. முகமும், மூளையும் இல்லாத எந்த உடலும் ஹோமா மாதிரி தான்..
இங்கே இருக்கின்ற எல்லா கூட்டணிகளும் மக்களோடு இணைந்தது இல்லை.. நாங்கள் மக்களோடு இணைந்து இருக்கிறோம். தேர்தலோடு அதற்கான பதிலை சொல்வோம். இவ்வளவு சதவீதம், அவ்வளவு சதவீதம், இந்த அழுத்தத்திற்கு பயந்துட்டாங்க.. அதற்கு பயந்துட்டாங்க என்ற கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்லி நேரம் கடத்த விரும்பவில்லை. தேர்தலில் இதற்கான பதிலை நாங்க தருவோம்.
தவெக தேர்தல் அறிக்கை
6 மாவட்டத்திற்கு நாங்க போகும் போதே தெரியும். மக்கள் வெள்ளத்தை தமிழக போலீசால் சமாளிக்க முடியவில்லை. திருவாரூரில் நடந்த ஒற்றைக் கூட்டம் போதும்.. திமுக கழகத்தின் தோல்வி தெரிந்துவிட்டது. எங்க தலைவரும் சரி, கட்சியும் சரி யாருக்கும் அடி பணிந்ததாக வரலாறு கிடையாது.. சரித்திரமும் கிடையாது.. மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். அது தான் வரலாறாக மாறும்..
தேர்தல் அறிக்கை தொடர்பாக தலைவர் விஜய் கமிட்டி போட்டு இருக்கிறார். இந்த தேர்தல் அறிக்கை அடுத்த 25 வருஷத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அவருடைய ஒவ்வொரு கையெழுத்தும் அடுத்த தலைமுறையை உருவாக்கும். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை தான் கொடுப்பார். கொடுத்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவார்.. 2026 கூட்டணிக்கான அரசியல் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதா இறந்த பிறகு இரண்டு கட்சி தலைவர்களும் மக்கள் மத்தியில் எதிர்ப்பை தான் சந்தித்து இருக்கிறார்கள்.
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் விவகாரம்
கூடிய விரைவில் தலைவரின் பிரச்சாரம் தொடங்கும். ஈரோட்டில் நடந்தது மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்தடுத்து நடக்கும். எல்லா கட்சியிலும் சரி.. அந்த கட்சியின் வீட்டில் இருக்கும் பெண்கள், மகன், மகள்கள் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள். எனவே தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் வரலாற்று வெற்றி பெறும்" என்றார்.
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் தொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜுனா, தொடர்ந்து ஃபைட் செய்துக்கொண்டு இருக்கோம். யார் குற்றவாளி என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான எல்லா சாட்சிகளையும் கொடுத்து இருக்கிறோம். வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கும் வரை தொடர்ந்து எங்கள் போராட்டம் என்பது இருக்கும்" என்றார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications