தவெக 200-இல் வெற்றி பெறுமா? மே 4 ஆம் தேதி வரை கனவு காணட்டும்! பங்கம் செய்த தமிழிசை
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 200+ தொகுதிகளில் வெற்றி பெறும் என செங்கோட்டையன் கூறிய நிலையில், வரும் 4 ஆம் தேதி வரை அவர்கள் கனவு காணட்டும் என்றும் விமர்சித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். செய்தியாளர்களை சந்தித்த அவர், "அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து ஓட்டு போடச் சொல்லுங்கள் என்று குழந்தைகளிடம் விஜய் சொல்வது குழந்தைகள் மனதில் ஒரு தவறான கருத்தை விதைப்பது போல உள்ளது" என்றும் தெரிவித்தார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
உண்மையிலேயே ஆழமாக சிந்திக்கூடிய விஷயம் தான்.. விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். குழந்தைகளை யூஸ் பண்ணி பிரசாரம் செய்யக் கூடாது.. குழந்தைகளை பிரசாரத்துக்கு ஈடுபடுத்தக் கூடாது என்றே விதி உள்ளது. ஆனால், விஜய் அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து ஓட்டு போடச் சொல்லுங்கள் என்று குழந்தைகளிடம் சொல்கிறார். இது குழந்தைகள் மனதில் ஒரு தவறான கருத்தை விதைப்பது போல உள்ளது.

குழந்தைகள் எல்லாரும் படிக்க வேண்டும். அப்படி இருக்கின்றதால் தான், கல்லூரியை தாண்டி ஓட்டை பற்றி சிந்திக்க தெரிந்த பிறகு அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கிறது .18 வயது ஆன பிறகு தான் வாக்களிக்க தகுதி உண்டாகிறது. அப்போது தான் ஓட்டை பற்றி அவர்கள் சிந்திக்க முடியும். ஆனால் இந்த வயதில் குழந்தைகளை இப்படி பழக்கினால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை விஜய் உணர வேண்டும். எல்லாரும் சுயநல அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோமோ என பயமாக இருக்கிறது.
செங்கோட்டையன் 200+ தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார். அவர்கள்கள் மே 4 ஆம் தேதி வரை கனவு காணட்டும். ஓட்டை பிரிப்பார்.. ஸ்பாயிலராக இருப்பார் என்றால் அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.. ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவார் என்று சொன்னால் கூட அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 200 தொகுதிகள் என்பதெல்லாம் ஓவரான சத்தம்.. இது சாதாரண சத்தம் இல்லை..
பாம் சத்தம் மாதிரி என்று சொல்கிறார். அந்த அளவுக்கு விசிலின் சத்தம் இருக்காது. விசில் சத்தம் ஓரளவு தான் கேட்கும். கனவு காண்பதற்கு அத்தனை பேருக்கும் தகுதி இருக்கிறது. அதனால் வரும் 4 ஆம் தேதி வரைக்கும் அவர்கள் காணட்டும். 200-க்கு மேற்பட்ட தொகுதிகள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.. தற்போது ஆன்மீக தலங்களைத் தேடி செல்லும் விஜய் அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேட செல்வாரோ என்று சந்தேகமாக உள்ளது” என்று கூறினார்.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications