Vijay Horoscope: "150+ தொகுதிகளில் தவெக வெல்லும்! விஜய் முதல்வராவார்! " ஜாதக கட்டம் சொல்வது என்ன? ஜோதிடர் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் தவெக 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று விஜய் முதல்வராவார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் விஜய்யின் ஜோதிடருமான ராதன் பண்டிட் வெற்றிவேல், ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ் புத்தாண்டு முடிந்த நிலையில் விஜய்யின் ஜாதக கட்டங்கள் நன்றாக இருக்கின்றன. அவர் அட்டகாசமாக அழகாக ஜெயித்து வந்துவிடுவார். ஒரு ஜோதிடர் சொல்கிறார் விஜய் 18 சதவீதம் வாக்குகளைத்தான் வாங்குவார். அவருக்கு நீச மகராஜ யோகம் இருக்கிறது. அதனால் தேர்தலில் ஜெயித்துவிடுவார், ஆனால் 18 சதவீதம்தான் ஓட்டு வாங்குவார் என்கிறார்.

இந்த யோகம் விஜய் பிறந்த போது ரெண்டே கால் நாட்களுக்கு இருந்துள்ளது. அவர் பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட தேதியில் முன்பு ஒரு நாளும் பின்பு ஒரு நாளும் இருந்தது. அப்படி என்றால் அந்த ரெண்டே கால் நாளில் பிறந்த எல்லாருக்கும் நீச மகராஜயோகம் இருக்கிறது என அர்த்தம்.
அந்த ஜோதிடர் தெரிந்து சொல்கிறாரா என தெரியவில்லை. விஜய் சுக்கிர திசையில் இருக்கிறார், ராகு புத்தியில் இருக்கிறார். என்ன அந்தரத்தில் இருக்கிறார், திசை என்றால் தலைவிதி, புத்தி என்றால் உடம்பு பலம், வானத்தில் இருக்கும் கிரகங்கள் எவ்வளவு சதவீதம் சாதகத்தை கொடுக்கும். இதை எல்லாம் வைத்துத்தான் ஒரு கணிப்பை சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு நீசமகராஜ யோகம் அவர் 18% வாக்குகளை வாங்குவார் என எந்த தராசில் வைத்து அளவு செய்தார் என தெரியவில்லை என ஒரு ஜோதிடரை விஜய் ஜோதிடர் விமர்சித்தார்.
மேலும் ராதன் கூறுகையில் விஜய்க்கு தேர்தல் பிரச்சாரம் நடத்த அனுமதி கொடுத்த பிறகும் அவர் போகாமல் இருப்பது அவர் சௌகரியம். பிரச்சாரத்திற்கு கூப்பன் கொடுப்பவர்கள் போக வேண்டும். விஜய் மக்கள் மனதில் இருக்கிறார். அவர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் மூன்றரை கோடி பேரின் வாக்குகளை நாங்கள் வாங்குவோம்.
விஜய் சார் மாதிரி திமுகவை பிரச்சாரம் செய்யாமல் இருக்க சொல்லுங்கள். அதன் முடிவுகள் மே 4 ஆம் தேதி தெரியும். நாங்கள் தென் தமிழகம் சென்றாலே 6 அல்லது 7 மாவட்டங்கள் கவர் ஆகிவிட்டதாக நம்புகிறோம்.
-
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications