இடைத்தேர்தல் முடிஞ்சாச்சு.. அமைச்சரவையில் மாற்றம் வருமா? அமைச்சர் நிர்மல் குமார் ரியாக்ஷன்
சென்னை: முதல்வர் விஜய்யின் 4 மாத நல்லாட்சிக்கான வெற்றி. வரும் நாட்களிலும் தவெகவின் நல்லாட்சி தொடரும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். மேலும் சொத்தை காப்பாற்றிக்கொள்ள கடைசி வரைக்கும் கம்பெனி மாதிரி வைத்துக்கொள்வாரே தவிர இதோடு அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி மூட்டை கட்டிவிட்டார் என்று கூறினார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்பதற்கும் பதில் அளித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் தவெகவின் வெற்றி பெற்று விட்டது. இதனால் தவெக எம்.எல்.ஏக்களின் பலம் 107 இருந்து 109 ஆக அதிகரிக்கிறது.

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட தாராபுரத்தில் தவெக 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளை தாண்டி வெற்றி பெற்றது. மதுராந்தகத்திலும் தவெக 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு தொகுதியிலும் திமுக இரண்டாம் இடத்திலும், அதிமுக 3 ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. டிவிகே வெற்றியை தமிழகம் முழுவதும் தவெகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
இடைத்தேர்தல் முடிந்து இரண்டு தொகுதியிலும் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கும் பதில் அளித்தார். நிர்மல் குமார் கூறியதாவது:-
அதிமுகவுக்கு மூட்டை கட்டிவிட்டார்
முதல்வர் விஜய்யின் 4-மாத நல்லாட்சிக்கான வெற்றி. வரும் நாட்களிலும் தவெகவின் நல்லாட்சி தொடரும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்த்த திமுகவுடன் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைகக் முடிவு செய்த பிறகு இது (அதிமுக) லெட்டர் பேடு கம்பெனிதானே.. இந்த லெட்டர் பேடு கம்பெனிக்கு எடப்பாடி பழனிசாமி முடிவு காலம் கட்டிவிட்டார்.
சொத்தை காப்பாற்றிக்கொள்ள கடைசிவரைக்கும் கம்பெனி மாதிரி வைத்துக்கொள்வாரே தவிர இதோடு அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி மூட்டை கட்டிவிட்டார். அதிமுகவை தனது சொந்த கம்பெனி போல எடப்பாடி மாற்றிவிட்டார். ராஜினமா செய்தவர்கள் எடப்பாடியுடன் பயணிக்க முடியாது என்பதால் தான் ராஜினாமா செய்தார்கள். வேறு எந்த காரணமும் இல்லை.
ஏன் ராஜினாமா செய்தார்கள்?
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தவெக கொடுக்கவில்லை. அதிமுகவும், திமுகவும் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்தன. அதிமுகவில் இருந்து எதற்காக அவர்கள் ராஜினாமா செய்தார்கள். எடப்பாடி திமுகவுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதால்தான் ராஜினாமா செய்த முடிவை எடுத்தனர். அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
கட்சியை லெட்டர் பேடு கம்பெனி மாதிரி வைத்துக்கொண்டு இருக்கிறார். 20 பேருக்கும் மேலான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி நடவடிக்கை பிடிக்காமல் உள்ளனர். அதிமுகவை தனது சொந்த கம்பெனி போல எடப்பாடி மாற்றிவிட்டார். ராஜினமா செய்தவர்கள் எடப்பாடியுடன் பயணிக்க முடியாது என்பதால் தான் ராஜினாமா செய்தார்கள். வேறு எந்த காரணமும் இல்லை.
அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சரவையில் மாற்றம் பற்றி முதல்வர்தான் முடிவு செய்வார். நீதிமன்றத்தில் தடை இருப்பதால் ஏனைய 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் எப்போது வந்தாலும் மக்கள் விஜய்க்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். திமுகவில் தலைவர்களே இல்லை. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை காட்டி வாக்கு சேகரிக்க முடியாது ஒரு தேர்தல் இல்லை இன்னும் 100 தேர்தல் வந்தாலும் தவெக வெற்றி பெறும்.. என்று கூறினார்.




Click it and Unblock the Notifications
