தவெகவில் சென்னை, கோவை, மதுரை உள்பட 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் - விஜய் அறிவிப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் முழு விபரம் வருமாறு:
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்டங்களாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று 3வது கட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக TVK Vijay எனும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்கு கழக தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி இன்று வெளியாகி உள்ள அறிவிப்பில் அரியலூர் மாவட்ட செயலாளராக எம் சிவக்குமார், இணை செயலாளராக பி சேகர், பொருளாளராக மார்ட்டின் மரியடோனி, துணை செயலாளர்களாக எம் எல் ராஜேஷ், ஏ பிரியதர்ஷினி உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக வி காந்தி ராஜ், இணை செயலாளராக முகம ரபி, பொருளாளராக ஜே தனபதி, துணை செயலாளர்களாக பி விகாஸ், எஸ் தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக மோகன் ராஜ், இணை செயலாளராக காந்தி பிரசாத், பொருளாளராக சுரேஷ், துணை செயலாளராக அன்பு, சசிகலா நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக எம் வெங்கடேஷ், இணை செயலாளராக சி தூயவன், பொருளாளராக சதீஷ் குமார், துணை செயலாளராக எம் செல்வராசு, பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக எம் பாலாஜி, இணை செயலாளராக அப்துல் ஹக்கிம், பொருளாளராக எம் முருகேசன், துணை செயலாளர்களாக எம் பிரகாஷ், ஆர் மஞ்சு செயல்படுவார்கள். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளராக பிரதீப் குமார், இணை செயலாளராக எஸ் பிரபு, பொருளாளராக எஸ்வி வினோஜ், துணை செயலாளர்களாக எஸ் ஆறுமுகம், ஆர் உமா நந்தினி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் - கடலூர்:
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக பி மலர்விழி ஜெயபாலா, இணை செயலாளராக கே நைனா முகமது, பொருளாளராக சண்முகநாதன், துணை செயலாளர்களாக பழனிகுமார், பாண்டி முனீஸ்வரி ஆகியோர் செயல்பட உள்ளனர். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பி ராஜ்குமார், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக எஸ் சீனுவாசன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக எஸ் விஜய், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக கே ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை:
கோவை தெற்கு மாவட்ட செயலாளளராக கே விக்னேஷ், இணை செயலாளராக அருண் பாண்டியன், பொருளாளராக சதீஷ் குமார், துணை செயலாளர்களாக கருப்புசாமி, கார்த்திகா செயல்படுவார்கள். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக வி ராஜ்குமார், எஸ் சரவணகுமார், ஆர் ரமேஷ் குமார், சேவியர் பாண்டி, மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர் மாவட்ட செயலாளராக வி சம்பத்குமார், இணை செயலாளராக மைக்கேல் குணசிங், பொருளாளராக சத்திய மூர்த்தி, துணை செயலாளராக சுமதி, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக ஜி பாலமுருகன், இணை செயலாளராக டி சோஹன் லால், பொருளாளராக யுவராஜ், துணை செயலாளராக பாலகார்த்தி, சப்னா செயல்படுவார்கள். சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட செயலாளராக கே அப்புனு என்ற வேல்முருகன், இணை செயலாளராக சதீஷ், பொருளாளராக குரு, துணை செயலாளராக முத்துலட்சுமி, கிருஷ்ணவேணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக ஈசிஆர் பி சரவணன், இணை செயலாளராக சரத்குமார், பொருளாளராக தமிழரசன், துணை செயலாளர்களாக ஜிஎம் சரவணன், சத்திரை செல்வி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை தெற்கு (தெற்கு) மாவட்ட செயலாளராக கே தாமோதரன், இணை செயலாளராக யுவராஜ் சக்ரவர்த்தி, பொருளாளராக பிஆர் சந்திரசேகர், துணை செயலாளர்களாக எஸ் முருகன், எஸ் கற்பகம் உள்ளிட்டவர்கள் செயல்படுவார்கள்.
சென்னை மத்திய மாவட்ட செயலாளராக எஸ்கேஎம் குமார், இணை செயலாளராக பி ரவி பிரகாஷ், பொருளாளராக முருகன், துணை செயலாளராக பார்த்திபன், தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை:
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக விஜய் அன்பன் கல்லானை, இணை செயலாளராக டி பாபு, பொருளாளராக பி ஈஸ்வரன், துணை செயலாளர்களாக வி கிருஷ்ணசாமி, பி விஜி தேவி நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்ஆர் தங்கபாண்டி, இணை செயலாளராக கோகுல்நாத், பொருளாளராக விக்னேஷ், துணை செயலாளர்களாக சாம்பால் ஜெயகரன், பி ஈஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக விஷால் கிருஷ்ணா, இணை செயலாளராக பி நடராஜன், பொருளாளராக மணிமாறன், துணை செயலாளர்களாக தினகரன், என் தீபிகா ஆகியோர் செயல்பட உள்ளனர்.
மயிலாடுதுறை - வேலூர்:
மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக சிஎஸ் கோபிநாத், இணை செயலாளராக அமீனுல் நூர், பொருளாளராக நவீன் ராஜ், துணை செயலாளர்களாக அறிவரசன், ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ஏ நவீன், இணை செயலாளராக கருணாகரன், பொருளாளராக எம் நவீன், துணை செயலாளர்களாக சத்யராஜ், வி சுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக வேல்முருகன், இணை செயலாளராக சீனிவாசன், பொருளாளராக பிரசாந்த், துணை செயலாளர்களாக தமிழ் செல்வன், எம் அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications