'ட்வின் டவர்ஸ்' சென்னை சென்ட்ரலை மேலும் அழகாக்கும் புதிய இரட்டை கோபுரங்கள்! சிறப்புகள் என்ன தெரியுமா
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தை மேலும் அழகாக்கும் வகையில் சென்ட்ரல் சதுக்கம் அருகே புதிய கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது.
தமிழக தலைநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். தமிழகத்தில் பயணிகள் அதிகம் பயன்படுத்தக் கூடிய ரயில் நிலைமாயகவும் சென்னை சென்ட்ரல் உள்ளது.
இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அழகுபடுத்தத் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல்
அதன்படி சமீபத்தில் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுற்றி சென்ட்ரல் சதுக்கம் திறக்கப்பட்டது. நடைபாதைகள், மக்கள் ஓய்வெடுக்க இருக்கைகள், சுரங்கப்பாதைகள், புல்வெளி என பல்வேறு வசதிகள் உடன் இந்த சென்ட்ரல் சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்குக் காத்திருக்கும் பயணிகள் பலரும் இந்த சென்ட்ரல் சதுக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சென்ட்ரல் சதுக்கம்
இதனிடையே இந்த சென்ட்ரல் சதுக்கம் அருகே இரட்டை கோபுரங்களைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை கோபுர கட்டுமானத்தைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ₹400 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் முதலில் 31 மாடிகளைக் கொண்டதாகத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், சில சிக்கல்கள் காரணமாக இதன் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டை கோபுரம்
இப்போது இறுதி செய்யப்பட்டுள்ள புதிய திட்டத்தின் கீழ், முதல் பிளாக்கில் மூன்று பேஸ்பென்டகள் மற்றும் 17 தளங்கள் இருக்கும். அதேபோல இரண்டாவது பிளாக்கில் தரை தளம் மற்றும் ஏழு தளங்கள் இருக்கும். தனியார் பங்களிப்புடன் இணைந்து இந்த கட்டிடத்தைக் கட்டுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஒரே நேரத்தில் 800 வாகனங்களை நிறுத்தும் வகையில் பேஸ்மென்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சிஎம்ஆர்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன சிக்கல்
ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல்களைப் பெறுவதில் சிக்கல் இருக்கும் என்பதாலேயே 31 மாடிகள் உடன் இருந்த இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சிஎம்ஆர்எல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கூவம் ஆற்றின் மிக அருகில் இந்தக் கட்டிடம் அமைய உள்ளது. இதனால் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெறுவது நிச்சயமாக எளிதான காரியமாக இருக்காது. புதிய திட்டத்திற்கு இன்னும் கூட அனைத்து அனுமதியும் கிடைக்கவில்லை. விரைவில் அதைப் பெறுவோம் என்று நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications