ட்விட்டரில் ப்ளூ டிக் வேண்டுமா? ரூ.900 போதும்.. இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
ரூ.900 கட்டணத்தில் ட்விட்டர் பயனாளர்கள் ‛ப்ளூடிக்’ வசதியை இந்தியாவில் உடனடியாக வீட்டில் இருந்தே பெற முடியும்.
சென்னை: ட்விட்டரில் ப்ளூடிக் பயனாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என அதன் சிஇஓ எலான் மஸ்க் அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் தான் இந்தியாவில் ப்ளூடிக் வசதியை பயனாளர்கள் எளிதாக பெறுவதற்கான நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.900 கட்டி ப்ளூடிக் பயன்பாட்டை இருந்த இடத்தில் இருந்தபடியே பொதுமக்கள் பெற முடியும். இதனை பெறுவது எப்படி? என்பது பற்றியும், அதனால் கிடைக்கும் பயன் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா உள்பட பல உலக நாடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. இந்த ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து அவர் ட்விட்டரில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்டமாக ட்விட்டரில் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். அதன்பிறகு ட்விட்டரில் போலி கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

‛ப்ளூடிக்’ வசதி
இதுதவிர ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ‛ப்ளூடிக்' வசதி உள்ளது. இதனை அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட மிகவும் பிரபலமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ‛ப்ளூடிக்' பயன்பாட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் ‛ப்ளூடிக்' வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.

ரூ.900 இருந்தாலே ‛ப்ளூடிக்’
இந்நிலையில் தான் ட்விட்டர் ‛ப்ளூடிக்' வசதியை சுயமாக பெறும் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனாளர்கள் மாதம் ரூ.900 கட்டணம் செலுத்தியே ட்விட்டர் ‛ப்ளூடிக்' வசதியை பெற முடியும். முன்னதாக, ட்விட்டர் பயனாளர்கள் ப்ளூடிக் வசதியை பெற தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டி இருந்த நிலையில் தற்போது அவர்கள் எளிதாக கட்டணம் செலுத்தி எளிய முறையில் பெற முடியும்.

வசதியை பெறுவது எப்படி?
இந்த வசதியை பெற விரும்பும் மக்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இடதுபுறத்தில் ட்விட்டர் பக்கத்தில் தெரியும் முகப்பு படத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் ‛Twitter Blue' என் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும். அதனை கிளிக் செய்து ரூ.900 செலுத்தினால் போதும். ட்விட்டரில் ப்ளூடிக் வசதியை பெற முடியும். அதன்பிறகு மாதந்தோறும் ரூ.900 செலுத்த வேண்டியது அவசியமாகும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ டிக் வசதி கிடைக்க இந்த வசதி உள்ள நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ப்ளூடிக் பெற்றால் வசதி என்ன?
மேலும் ஒவ்வொரு நாடுகளை பொறுத்து ப்ளூடிக்கிற்கான விலை நிர்ணயம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். இது தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்த ப்ளூடிக் வசதியை பெற்றால் ட்விட்டரில் தேடல் மற்றும் பதிவுகளுக்கான உங்களின் பதிலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.650 கட்டண சேவை வசதி?
ட்விட்டர் பயனர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தாவை Web மூலம் பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த வசதி தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை. இந்த வசதி கிடைத்தால் ப்ளூ மெம்பர்ஷிப்பை மாதம் ரூ.650ல் பெற முடியும். இதில் ஓராண்டுக்கான திட்டத்தை பெற்றால் மாதம் ரூ.566.67 என்ற கட்டணத்தில் ரூ.6,800 செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications