விடாது அடிச்சு தூக்கும் நேசமணி.. சவுகிதார் பாணியில் பெயரில் ஒட்டிக் கொண்ட 'காண்டிராக்டர்'!
சென்னை: பாஜகவினரின் சவுகிதார் போல் காண்டிராக்டர் என டிவிட்டர் கணக்காளர்கள் தங்களின் பெயருக்கு முன்னால் சேர்த்துள்ளனர்.
ஃபிரன்ட்ஸ் படத்தின் காமெடி கதாப்பாத்திரமான நேசமணி உலகளவில் ட்ரென்ட்டாகி வருகிறார். நேசமணியின் தலையில் சுத்தி விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பரவிய கருத்தால் Pray for Nesamani என்ற ஹேஷ்டேக் நேற்று உலகளவில் வைரலானது.
தமிழகத்தில் இருந்து உருவான இந்த ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டானதால் அனைத்து செய்தி ஊடகங்களும்
இந்த செய்தியை ஆர்வமுடன் வெளியிட்டன. இதனால் இன்றும் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளார் நேசமணி.

பெய்ன்டிங் காண்டிராக்டர்
இதனிடையே டிவிட்டர் கணக்காளர்கள் தங்களின் பெயருக்கு முன்னால் காண்டிராக்டர் என சேர்த்துள்ளனர். நேசமணி ஃபிரன்ட்ஸ் படத்தில் பெய்ன்டிங் காண்டிராக்டராக இருந்ததால் நெட்டிசன்களும் தங்களின் பெயருக்கு முன்னால் இதனை சேர்த்துள்ளனர்.

சவுகிதார்
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை நாட்டின் காவலாளி என கூறிய பிரதமர் மோடி பெயருக்கு முன்னால் சவுகிதார் என குறிப்பிட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து அனைத்து பாஜகவினரும் தங்களின் பெயருக்கு முன்னால் சவுகிதார் என போட்டுக்கொண்டனர். இந்நிலையில் பாஜகவினர் பாணியில் டிவிட்டரிஸ்ட்டுகளும் தங்களின் பெயருக்கு முன்னால் காண்டிராக்டர் என சேர்த்து நேசமணிக்காக பிரார்த்தனை செய்துவருகின்றனர். அவற்றில் சிலவற்றை காண்போம்..
|
காண்டிராக்டர் தோழர்
சற்றுமுன் கிடைத்த தகவல்..
|
காண்டிராக்டர் கவி பாரதி
அட பதவி ஆசை புடிச்சவங்களா..
|
காண்டிராக்டர் எவனோ ஒருவன்
இருளில் மூழ்கியது தமிழகம்.
|
காண்டிராக்டர் அருண்குமார்
அய்யா! நானும் காண்ட்ராக்டர் டைட்டிலை சேர்த்துவிட்டேன்.. இதுவேடிக்கையாக உள்ளது.
|
காண்டிராக்டர் திலீப் ராஜ்
எவ்வளோ பிரச்சனை போய்ட்டு இருக்கு #Nesamani பத்தி பேசிட்டு கூத்தடிச்சுட்டு இருக்கீங்கன்னு நிறைய பேர் கேட்பதை பார்க்க முடிகிறது
தமிழனுக்கு கொண்டாட்டத்துக்கு காரணம் எல்லாம் தேவையில்லை!! கொண்டாடனும்ன்னு நினைச்சுட்டான்னா கொண்டாடி தீர்த்துடுவான்!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications