உதயநிதி கைதில் இரண்டு விஷயங்கள்: திமுகவுக்கு என்ன மைலேஜ்.. விஜய்க்கு என்ன மைலேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு தரப்புக்குமே ஒரு மைலேஜ் இருக்கிறது. இத்தனை நாட்களாக சொகுசாக அப்பாவின் நிழலில் வந்தவர் என்ற பிம்பத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலினை இந்த கைது போராளி என்ற பிம்பத்தை கொடுத்துள்ளது. உதயநிதிக்கு பெரிய பூஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய் தரப்பில் பார்த்தால், அவதூறாக பேசினால், எதிர்க்கட்சி தலைவரையே கைது செய்தோம் என்று மறைமுகமாக திமுகவினரை எச்சரிப்பதாக உள்ளது. வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் பேசினால் கைது தான் என்பதை நிரூபிப்பதாக இந்த கைது உள்ளது.

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கடந்த 3ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், முதல்வர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும ஆபாசமாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்தன.

Two aspects of Udhayanidhi stalin s arrest What mileage does the DMK gain and Vijay gain

உதயநிதி மீது புகார்

இதுகுறித்து தவெக தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசி உள்ளார். மேலும் நடிகை திரிஷாவை உள்நோக்கத்துடன் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசிய பேச்சு ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பான வீடியோவை தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் பதிவேற்றி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான சூழலை உருவாக்கி உள்ளனர்.

எனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

உதயநிதி கைது


இதன் பேரில் தஞ்சை நகர கிழக்கு போலீசார் உதயநிதிஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயநிதியை கைது செய்தனர். தொடர்ந்து போலீஸ் வேனில் ஏற்றி, தஞ்சைக்கு அழைத்து வந்தனர். உதயநிதி சென்னையில் கைது செய்யப்பட்டதில் தொடங்கி தஞ்சை அழைத்து வரும் வரை தமிழ்நாடு முழுவதுமே போராட்டம் நடந்தது. சென்னை உதயநிதி வீடு அமைந்த நீலாங்கரையில் உச்சகட்டமாக போராட்டங்கள் நடந்தது.

திரண்ட திமுகவினர்

அதேபோல் ஒவ்வொரு ஊரில் இருந்தும் திமுகவினர் திரண்டு வந்து உதயநிதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சையில் மொத்த திமுகவினரும் திரண்டனர். தஞ்சைக்கு வரும் அத்தனை வழியிலும் திமுகவினர் திரண்டனர். இதனால் நகருக்குள் உதயநிதியை அழைத்த செல்ல முடியவில்லை. தஞ்சையின் புறநகரில் உள்ள செங்கப்பட்டி காவல் நிலையத்தில் வைத்தே விசாரணை செய்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர் உதயநிதி அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து காரில் திருச்சி சென்ற உதயநிதி ஸ்டாலின், விமானத்தில் ஏறி சென்னை திரும்பினார்.

இந்த கைதால் உதயநிதிக்கு கிடைத்த மைலேஜ்

பொதுவாக திமுகவினர் சிலரும், எதிர்க்கட்சியினருமே வாரிசு, சில்வர் ஸ்பூனில் பிறந்தவர் என்று விமர்சித்து வந்தனர். ஆனால் நேற்றைய கைது, திமுகவினர் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்துள்ளது. திமுகவினர் அனைவரும் உதயநிதியின் பின்னால் அணி திரண்டனர்.

ஆளும் தவெக கூட்டணி அரசு உதயநிதியை பழிவாங்குவதாக திமுகவினர் நம்பினர். இதனால் திமுகவினர் மத்தியில் அனுதாப அலை உருவானது. ஒரு பெரிய எழுச்சியும் உருவாக இந்த கைது காரணமாக இருந்தது. காவிரி பிரச்சனை மற்றும் ஊழல் குற்றச்சாட்டு, பட்ஜெட் குறித்துப் பேசப்படும் இந்த சமயத்தில் நடந்த கைது சம்பவம், உதயநிதியைச் சுற்றி அரசியலை உருவாக்கியது.

உதயநிதி வலுவான தலைவராக உருவெக்க இந்த கைது வாய்ப்பை வழங்கி உள்ளது. விஜய்க்கு மாற்று உதயநிதி என்ற பிம்பம் உருவானதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். திமுக தனது அடுத்தகட்ட தலைவரான உதயநிதி எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைக் காட்ட இந்த கைது உதவி உள்ளது.

விஜய்க்கு என்ன மைலேஜ்

அதேநேரம் விஜய், உதயநிதியை சிறையில் அடைப்பது நோக்கம் இல்லை என்று கூறி விசாரணைக்கு பின்னர் விடுவித்துள்ளது. விஜய்யை பொறுத்தவரை, திரிஷா மற்றும் தன்னை பற்றி தவறாக உதயநிதி பேசியதால் கைது செய்ததாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார். அதனை மக்களும் நம்பிவிட்டார்கள். அதுதான் விஜய்க்கு வேண்டும் என்பதால், அவரது நோக்கம் நிறைவேறிவிட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். குக்கிராமத்தில் கூட விஜய் த்ரிஷா குறித்து உதயநிதி தவறாக பேசியதாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் உதயநிதிக்கு எதிராக அரசியல் ஆயுதமாக இந்த கைதை விஜய் பயன்படுத்தி உள்ளதாக பார்க்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அதேபோல் அவதூறாக, அசிங்கமாக யாராவது இனி பேசினால் கைது தான்.. எதிர்க்கட்சி தலைவரையே கைது செய்துவிட்டோம் பாருங்கள் என்பதை காட்டவே இந்த கைது, விசாரணை எல்லாம் நடந்துள்ளது. இனி அரசியல் தலைவர்கள் எல்லை மீறி பேச தயங்குவார்கள்.. தனிநபர் விமர்சனங்களுக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும். எனினும் இருதரப்புமே மைலேஜ் கிடைக்க இந்த கைதை பயன்படுத்தி உள்ளன. இதில் யாருக்கு அதிக லாபம் என்பது மக்களுக்கு தான் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+