ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வந்த வங்கி ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலி: கொதித்தெழும் சக ஊழியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்த இரு வங்கி ஊழியர்கள் எதிர்பாராத சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மும்பையில் பெண் வங்கி மேலாளரும், தமிழகத்தில் ஆண் வங்கி மேலாளரும் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த மேலாளரான நேஹா குப்தா, அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மும்பை வாஷி (Vashi) மண்டல அலுவலகத்தில் மூத்த மேலாளராகப் பணியாற்றி வந்தார். பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. இவரது மறைவுக்கு அகில இந்திய யூனியன் பேங்க் அதிகாரிகள் சங்கம் (மும்பை கிளை) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இவரது மறைவு சக ஊழியர்களிடையேயும் வங்கி அதிகாரிகளிடையேயும் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Two bank employees who came to work yesterday Sunday died in an accident

அதேபோல், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் ராணிப்பேட்டை EAB கிளையின் மேலாளரான திரு. வெங்கட பிரசாத், நேற்று காலை பணிநிமித்தமாக வங்கிக்குச் சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட கொடூர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சென்னை மண்டலம், காஞ்சிபுரம் பிராந்தியத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை கிளையில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் செல்லும் வழியில் இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது.

இவரது எதிர்பாராத மறைவு குறித்த செய்தி வங்கியின் சக ஊழியர்களிடையேயும் அதிகாரிகளிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெங்கட பிரசாத் அவர்களின் மறைவுக்கு வங்கி நிர்வாகமும் ஊழியர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு ஊழியர்களின் மறைவு குறித்த செய்தியை யூனியன் வங்கி நிர்வாகம் இணையத்தில் பதிவிட்டிருந்தது. இதனைப் பார்த்த பல வங்கி ஊழியர்களும் நெட்டிசன்களும் தங்களது ஆவேசத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இரண்டு வங்கி மேலாளர்களை ஞாயிற்றுக்கிழமையில் வேலைக்கு வரவழைத்து, அவர்களை மனரீதியாக நிலைகுலையச் செய்து, சாலை விபத்துகள் மூலம் அவர்களின் உயிரைப் பறித்த இந்த நிறுவனக் கொலைக்காக (Corporate Homicide), யூனியன் வங்கியின் தலைவர் மற்றும் நிதிச் சேவைச் செயலாளர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும்" என்று கொந்தளித்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன், "இந்த அரசாங்கத்திற்கோ அல்லது நிர்வாகத்திற்கோ இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. பணியின்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அவர்களையே நாம் பொறுப்பாக்க வேண்டும். நாம் அப்படிச் செய்யாதவரை, எந்தவொரு போராட்டத்தையும் அவர்கள் பொருட்படுத்தப் போவதில்லை. இதை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பது எப்படி என்று தெரிந்தவர்கள் யாராவது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை மற்றும் இரண்டு நாட்கள் விடுமுறை கேட்ட ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று வேலைக்கு வரவழைத்த மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வங்கி ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+