அரண்டு போன சென்னை.. அண்ணன், தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் இருவர் ஓட, ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் 6 தனிப்படைகளை அமைத்திருக்கின்றனர்.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வருபவர் இரட்டைமலை சீனிவாசன். இவரது தம்பி ஸ்டாலின் மீதும், அண்ணன் சீனிவாசன் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், இன்று இரவு இருவரையும் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்திருக்கிறது. தங்கள் மீது கொலை தாக்குதல் நடப்பதை உணர்ந்த இவருவரும் ஆளுக்கு ஓருபுறமாக ஓடியிருக்கின்றனர்.

chennai crime police

ஆனால், அவர்களை விடாமல் துரத்திய கும்பல் தம்பி ஸ்டாலினை பட்டாபிராம் எல்லையில் வைத்தும், அண்ணன் சீனிவாசனை ஆவடியில் புதருக்குள் வைத்தும் படுகொலை செய்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இட்டை மலை சீனிவாசனிடம் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன், மாதேஷ் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு இருவரையும் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரம்பூரில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபோது ரவுகளின் எதுவோ, அந்த மொழியில் பேசி நடவடிக்கை எடுப்போம், சென்னையில் ரவுடியிசம் ஒழிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது சென்னையில் இரட்டைக்கொலை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+