திமுகவில் 2 பெண் வேட்பாளர்கள்... கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போட்டி
Recommended Video

சென்னை: இன்று வெளியிடப்பட்டுள்ள திமுக வேட்பாளர் பட்டியலில் இரண்டு பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 20 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில், இரண்டு பெண் வேட்பாளர்களாக, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் இடம்பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியின் வேட்பாளராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக அவர் தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார்.
மக்களவை தேர்தலில் முதல்முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக 2007-ஆம் ஆண்டு இவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகளும், தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.












Click it and Unblock the Notifications