கழுத்தில் முத்தம் தந்துட்டு, "நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ்".. 2 HM-களால் ஆடிப்போன திருச்சி, கிருஷ்ணகிரி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது.. இந்த தொல்லையை தந்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயம்.. இப்போது 2 ஹெச்.எம்-களுமே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இது தமிழகம் முழுவதுமே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று காலை தனது தோழியுடன் வேன் கட்டணம் குறித்து கேட்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றிருக்கிறார்.

Two Headmasters Student Kissing Case

அப்போது தோழியை வெளியே அனுப்பிவிட்டு, அந்த மாணவியை மட்டும் தனியாக அறைக்குள் அழைத்துச் சென்றாராம் தலைமை ஆசிரியர் ஜெயராஜ்.. அப்போது மாணவியின் கன்னம் மற்றும் கழுத்தில் முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கழுத்தில் முத்தம்

இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது, இனிமேல் நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்" என்று மாணவியிடம் சொன்னாராம்.. வீட்டுக்கு சென்ற மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதைக் கவனித்த அவரது அம்மா, மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார்.. அப்போதுதான் நடந்த சம்பவத்தை மாணவி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பள்ளிக்கே வந்து இதுகுறித்து விசாரித்துள்ளனர்.. அப்போதுதான் 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மேலும் சில மாணவிகளிடமும் தலைமை ஆசிரியர் இதுபோன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது.. இதனால் மேலும் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஹைலைட்டே இதுதான்

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பள்ளியின் பின்பக்க வழியாக தப்பி சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் அவரை கைது செய்தனர்.. இதில் ஹைலைட் என்ன தெரியுமா? இந்த தலைமை ஆசிரியர் பாதிரியாராகவும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது இதுகுறித்து பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில் பிரான்சிஸ் (48) என்பவர் வசித்து வருகிறார்.. இவர் உனிசெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தப் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அவர் தகாத முறையில் தொட்டு பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸ்

கடந்த 31-ம் தேதி வகுப்பில் இருந்த 4-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகள் உதவி மையத்தின் 1098 எண்ணுக்கு புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாவித்திரி நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்.. அப்போது பிரான்சிஸ், மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படும் தகவல்கள் தெரியவந்ததையடுத்து, அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஆடிப்போன திருச்சி, கிருஷ்ணகிரி

இப்படி ஒரே நேரத்தில் திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 தலைமை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒழுக்கத்தை போதிக்கும் தலைமை ஆசிரியர்களே இப்படியிருந்தால், பிள்ளைகள் யாரிடம் போய் நியாயம் கேட்பது? பிள்ளைகளை வழிநடத்த வேண்டியவர்களே இப்படியிருந்தால், அவர்களை யார் காப்பது????

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+