அந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க சார்.. சென்னையில் இடிக்கப்படும் 2 பிரபல பாலங்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள பிரபல மேம்பாலம் ஒன்று இந்த மாதம் இடிக்கப்பட உள்ளது. மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்காக இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Two major bridges in Chennai will be demolished soon due to Metro Works

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

மெட்ரோ பாலம்: இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாலம் இடிப்பு: இந்த கட்டுமானம் காரணமாக சென்னையில் பல்வேறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மயிலாப்பூரில் பாலம் ஒன்று இடிக்கப்பட உள்ளது., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) திருமயிலை எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெர்ட் பாலத்தை இடிக்க முடிவு செய்துள்ளனர்.

கட்டம்-2 திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதால் இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது. மந்தவெளி அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருக்கும். இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய பாலம் அருகில் கட்டப்பட்டு அதன் மூலம் வாகன போக்குவரத்து மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்மொழியப்பட்ட திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம், இரண்டு வழித்தடங்களை இணைக்கும் ஒரு மெட்ரோவாக அமைய உள்ளது. இங்கே 35 மீ ஆழத்தில் ஆழமான சுரங்கங்களை அமைக்க உள்ளனர் .. திருமயிலை மற்றும் அது இணைக்கும் மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் 2028 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்படும். திருமயிலை நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகள் கட்டுவதன் காரணமாக இங்கே உள்ள பாலம் இடிக்கப்பட உள்ளது.

இதற்கான அனுமதியை மெட்ரோவிற்கு சென்னை மாநகராட்சி அளித்துள்ளதால் விரைவில் பாலம் இடிப்பு பணிகள் நடக்க உள்ளன. அதேபோல் அடையார் சாலையில் உள்ள பாலத்திலும் ஒரு கை உடைக்கப்பட்டு உள்ளது. வலது பக்கம் திரும்பும் கை இடிக்கப்பட உள்ளது. அந்த பாலம் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+