மோடியின் பிரம்மாஸ்திரம்.. இது 2 மட்டும் நடந்தால்.. எல்லாம் மொத்தமாக மாறும்.. பாஜகவின் மாஸ்டர்பிளான்
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு 2 முக்கியமான திட்டங்களை பாஜக தேசிய அளவில் கையில் எடுத்துள்ளதாம்.
இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.

நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும்.
மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
அதன்பின் ஒன்றரை வருடமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்: இந்த நிலையில்தான் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளது
இந்த நிலையில்தான் மக்கள் நலன் கருதி லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவிற்கு பின் இந்த நிறுவனங்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்ட நிலையில்தான் தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
கச்சா எண்ணெய்: இந்த நிலையில் கச்சா எண்ணெய் மீதான காற்றழுத்த வரியை டன்னுக்கு ரூ.6,700 ஆக குறைத்துள்ளது மத்திய அரசு. அதே சமயம் டீசல் மற்றும் ஏடிஎஃப் ஏற்றுமதி மீதான செஸ் அதிகரிக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த வரி குறைக்கப்பட்டு உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை பெருமளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பென்ஷன்: லோக்சபா தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. புதிய பென்சன் திட்டத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்த தேர்தலுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்தான் அரசு ஊழியர்களை கவரும் விதமாக ஓய்வூதியத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஓய்வூதிய திட்டம்: நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இதில் முக்கியமான வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆனால் இதை இன்னும் தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
புதிய பென்சன்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications