"இப்போ மாங்காயே ரெண்டு”.. ஜிகே மணி முன்னிலையில் பாமக பற்றி அமைச்சர் MRK பன்னீர்செல்வம் கிண்டல்!
தருமபுரி: "ஒரே கல்லில் 2 மாங்காய்.. தற்போது மாங்காயே இரண்டு" என பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோரை வைத்துக் கொண்டு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பாமக ராமதாஸ் - அன்புமணி மோதலை கிண்டல் செய்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவர் செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று அன்புமணி கூறி வருகிறார். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களுக்கு அன்புமணி மீண்டும் பதவி வழங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏவாக இருக்கும் அருள் பதவியை பறித்து அன்புமணி அறிவித்தார். தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என அருள் தெரிவித்தார்.
இந்நிலையில், தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டினார் ராமதாஸ். இக்குழுவில் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்ட 19 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் அன்புமணி, வடிவேல் ராவணன், திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டு 21 பேர் கொண்ட குழுவாக செயல்படும் என அறிவித்தார்.
ராமதாஸ் லெட்டர் பேடில் அன்புமணி பெயர் இல்லை
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட லெட்டர் பேடில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. ராமதாஸின் புதிய நிர்வாகி நியமனம் அறிவிப்பு லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக ராமதாஸ் லெட்டர் பேடில் நகல்கள் என செயல் தலைவர் அன்புமணி பெயர் இருக்கும். நேற்று வெளியான நியமன அறிவிப்பில் அன்புமணிக்கு நகல் அனுப்பப்படவில்லை.
பாமகவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர், ராமதாஸ் - அன்புமணி இணைந்து பேசி சுமூகமான நிலையை எட்ட வேண்டும் எனக் கூறி வருகின்றனர். ஆனால், ராமதாஸ் - அன்புமணி இடையே இன்னும் மோதல் போக்கு முடிவுக்கு வந்தபாடில்லை.
மாங்காவே ரெண்டு - அமைச்சர் கிண்டல்
இந்நிலையில், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாமக எம்.எல்.ஏக்கள் ஜிகே மணி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேடையில் பேசுகையில், "ஒரே கல்லில் 2 மாங்காய். தற்போது மாங்காயே இரண்டு" எனக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோரை வைத்துக் கொண்டு பாமகவை கிண்டல் செய்யும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications