சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுங்கிய பல்லாவரம்.. நள்ளிரவில் துப்பாக்கி சத்தம்.. ராணுவ அதிகாரியை கொன்று.. வீரர் தற்கொலை!

ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பல்லாவரத்தில் நள்ளிரவில் துப்பாக்கிசூடு-வீடியோ

    சென்னை: ஏன் ஒழுங்கா வேலைக்கு வரலன்னு கேட்டதாலே, ராணுவ அதிகாரியை சுட்டு கொன்று, தானும் அதே துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டார் ஒரு வீரர்.. சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாரிகளுக்கான குடியிருப்பில் பிரவீன்குமார் ஜோஷி என்பவர் வசித்து வந்தார். ராணுவ அகடாமியில் ஹவில்தாராக பணியாற்றி வந்த இவர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

    Two military men fire incident in Chennai army house board

    அவருக்குக் கீழ் ரைஃபிள் மேனாக ஜெட்ஷீர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே வேலை விஷயமாக நிறைய பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது. வேலைக்கு ஏன் ஒழுங்காக வருவதில்லை என்று உயரதிகாரி, ஜெட்ஷீரை கேட்டுள்ளதாகவும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்றிரவும் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரவீன்குமார் தூங்க போய்விட்டார். ஆனால் ஆத்திரத்திலிருந்த ஜெட்ஷீர், நடுராத்திரி உயரதிகாரி வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரவீன்குமாரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    "கம்பெனி" தர்றீங்களா.. அத்துமீறிய நபரை நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்த பெண்கள்.. பரபர வீடியோ!

    உடனே, ஜெட்ஷீர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து டமார்.. டமார் என நள்ளிரவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு குவார்ட்டர்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சியானார்கள். ஓடிப்போய் சென்று பார்த்ததில், இருவருமே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசுக்கு சொல்லப்பட்டதும், விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    In Chennai army house board two military man fire incident and Pallavaram Police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X