பிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. !

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய கள்ள ஜோடி கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    CCTV Theft Video : சூப்பர் மார்க்கெட்டில் திருடிய கள்ள ஜோடி கைது- வீடியோ

    சென்னை: தன் புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரத்தை லட்சுமி ஒளித்து வைத்திருப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    சென்னை பூந்தமல்லி ரோட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு போன மாசம் ஒரு ஆண், பெண் ஜோடி கடைக்கு வந்தது. தம்பதியை பார்ப்பதற்கு டீசன்ட்டாக இருக்கவும், அவர்களுக்கு கடை ஊழியர்கள் பொருட்களை எடுக்க உதவி செய்ய வந்தார்கள்.

    நாங்களே எடுத்து கொள்கிறோம் என்று சொல்லி, வாங்க போகும் பொருட்களை எடுத்து வைக்க, அங்கிருந்த கூடைகளை ஆளுக்கு ஒன்று எடுத்து கொண்டனர். ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் சென்று அங்கிருந்த பொருட்களை பார்த்து, ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து கூடைக்குள் போட்டனர்.

    பூந்தமல்லி போலீசார்

    பூந்தமல்லி போலீசார்

    ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆளை காணவில்லை. கடைசியில் பார்த்தால் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சென்ட் பாட்டில்களை ஆட்டைய போட்டுவிட்டு போயிருந்தனர். பிறகுதான் கடை ஓனர் சபிக் அகமது இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு அதிர்ந்து பூந்தமல்லி போலீசிலும் புகார் தந்தார். இது சம்பந்தமாக அந்த ஜோடியை போலீசார் தேடி வந்தனர்.

    சுற்றி வளைத்தனர்

    சுற்றி வளைத்தனர்

    இந்நிலையில், அதே ஜோடி.. அதே கடைக்கு.. அதே சென்ட் பாட்டிலை ஆட்டைய போட உள்ளே வந்தனர். இவர்களை சிசிடிவி காமிராவில் பார்த்து பார்த்து பழக்கப்பட்டு கடுப்பில் இருந்த ஊழியர்கள், ஜோடி உள்ளே நுழைந்ததுமே அப்படியே சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். நேராக பூந்தமல்லி ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

    சூப்பர் மார்க்கெட்

    சூப்பர் மார்க்கெட்

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் புருஷன், பொண்டாட்டியே இல்லையாம். பெயர் நாகப்பன், லட்சுமி. புருஷன், பொண்டாட்டி போல ஜோடியாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தால் சந்தேகம் வராது என்று நினைத்தார்களாம்.

    புடவைக்குள் பை

    புடவைக்குள் பை

    லட்சுமிக்கு 38 வயதாகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், லட்சுமி தான் கட்டியிருக்கும் புடவைக்குள் ஒரு பெரிய பையை கட்டி தொங்க விட்டிருப்பாராம். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், டபக்கென்று பொருளை திருடி புடவைக்குள் போட்டுக் கொள்வாராம். இப்படியே பல சூப்பர் மார்கெட்டுகளில் லட்சுமிக்கு புடவைக்குள் இருக்கும் பெரிய பை..தான் உதவியாக இருந்திருக்கிறது. இப்போது இந்த கள்ள ஜோடி ஜெயிலுக்குள் உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+