Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்கலில் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்ய இரண்டே வழி தான்.. ரயிலில் போகிறவர்கள் கவனிக்க வேண்டியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தட்கலில் டிக்கெட் எடுப்பது மிகவும் கடினமான விஷயமாக பலருக்கும் இருக்கிறது. முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் துண்டுபோட்டோ, அடித்து பிடித்தோ ஏறி இடம் பிடிப்பது எவ்வளவு கடினமோ, அதுபோல் தட்கல் டிக்கெட் புக்கிங்கும், தொழில்நுட்ப ரீதியாக கடினமான விஷயம் ஆகும். சரி தக்கல்டிக்கெட் புக்கிங் எளிதாக என்னதான் வழி.. இதை பாருங்கள்.

பொங்கல் பண்டிகையின் போது பலரும் ரயிலில் பயணிக்க விரும்பினார்கள். ஆனால் பொங்கல் ரயில்கள் எல்லாம் 3 மாதம் முன்பே முடிந்து விட்டது. தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது தான் ஒரே வழி. ஆனால் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்து ஒன்றும் எளிதான காரியம் அல்ல.. 11 மணிக்கு முன்பு சரியாக உட்கார்ந்து, தவறுகள் செய்யாமல் சரியாக முயற்சி செய்தால் தான், அபூர்வமாக டிக்கெட் கிடைக்கும்.

Two simple ways to book Tatkal train ticket: check the details now

பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம், தமிழ் புத்தாண்டு, கோடைக்கால விடுமுறை, சுபமுகூர்த்த தினங்கள், வார இறுதி நாட்களில் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்து எளிதானது அல்ல.. ஏன் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. பல லட்சம் பேர் டிக்கெட் புக்கிங் செய்ய மோதுவார்கள் என்பதால் பேமெண்ட் மோடில் பிரச்னை வரும். அல்லது பயணிகள் லிஸ்டில் பிரச்சனை வரும். இதனால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போய்விடும்.

தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் தான் என்ன? தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய போகிறீர்கள் என்றால், அதிவேக இணைதள இணைப்புடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் முயற்சி செய்யுங்கள். தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பு இரண்டு விஷயங்களை சரியாக செய்துவிடுங்கள். அது என்ன வென்றால், யார் யார் பயணிக்க போகிறீர்களோ, அவர்களின் பெயரை காலையிலேயே எழுந்த உடன் ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இன் செய்து add master list இல் சேர்த்துவிடுங்கள். மாஸ்டர் லிஸ்டை பொறுத்தவரை அனைவரது ஆதார் எண்ணும் வேண்டும். ஆதார் எண்ணை வைத்து சேமியுங்கள். அப்படி பெயர்களை சேர்க்கும் போது ஒருவருக்குமேல் லோயர் பர்த் போடாதீர்கள். இதை எல்லாம் சரியாக செய்து வைத்துக் கொண்டால், தட்கல் நேரத்தில் சிக்கல் வராது.

அதேபோல் ஐஆர்சிடிசி வாலட் பேமெண்ட் மோடில் டிக்கெட்டுக்கான பணத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் சிக்கல் இல்லாமல் பேமெண்ட் போக ஒத்துழைக்கும். மற்ற பேமெண்ட் மோடுகள் சட்டென சிக்கலை உருவாக்கும்.. எனவே டிக்கெட் கட்டணத்த ஐஆர்சிடிசியின் பிரத்யேக வாலட் பேமெண்ட் மோடில் காலையிலேயே போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரமான 11 மணியின் போது என்ன செய்ய வேண்டும்... தட்கல் முன்பதிவு ஏசி பெட்டிகளுக்கு 10 மணிக்கே ஓபன் ஆகிவிடும். ஏசி பெட்டிகளில் பயணிக்க 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 11 மணிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும்.11 மணிக்கு ஓபன் செய்ய போகிறீர்கள் என்றால். 10 58க்கு லாக் இன் செய்து உள்ளே சென்றுவிடுங்கள். உள்ளே போய் எந்த பதற்றமோ, தவறுகளோ இல்லாமல் சரியாக மேற்கொள்ளுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய ஊர், கிளம்பும் ஊரை சரியாக கிளிக் செய்து, நாள் நேரத்தை கிளிக் செய்து. எந்த ரயிலோ அதற்கு பக்கத்தில் 11 மணிக்குள் போய்விடுங்கள் .

சரியாக 11 மணி ஆன உடன் கிளிக் செய் உள்ளே செல்லுங்கள். போன உடன், ஏற்கனவே நீங்கள் கிரியேட் செய்த மாஸ்டர் லிஸ்டில் உள்ள பெயர்கள் அப்படிய வந்துவிடும்.நீங்கள் ஒரு லெட்டரைஅடித்தாலே அவர் பெயரை காட்டும். அப்படியே செலக்ட் செய்தால் வயது பர்த் என எல்லாமே வரும்.. இப்படியே குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தால் அவர்களின் பெயரை அடித்து செலக்ட் செய்து வைத்துவிடுங்கள்.

அதன்பிறகு புக்கிங் கன்பார்ம் என்றால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யட்டும் என்ற மோடை கிளிக் செய்து கீழே வந்தால் கேப்சியா கேட்கும். அதனை பதற்றம் இல்லாமல் அடித்தால், உள்ளே பேமெண்ட் மோடுக்கு போகும். பேமெண்ட் மோடில் ஐஆர்சிடிசி வாலட் ஆப்சனை செலெக்ட் செய்தால் சட்டென உள்ளே போய் எந்த சிக்கலும் இல்லாமல் பேமெண்ட் கிளிக் ஆகிவிடும். எளிதாக முன்பதிவு செய்யலாம்.

ஐஆர்சிடிசி வாலட்டிற்கு அடுத்தபடியாக பேடிஎம் பயன்படுத்தலாம்.. பேமெண்ட் எரர் இல்லை என்றால் எளிதாக பேடிஎம் இல் உள்ள ஸ்கேன் பே ஆப்சனை செலெக்ட் செய்து மொபைலை வைத்து ஸ்கேன் செய்தால் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால் பொங்கல் சமயத்தில் நடந்தது என்னவென்றால் எந்த பேமெண்ட் மோடும் ஓர்க் ஆகவில்லை. மொத்தமாக ஐஆர்சிடிசி தளமே முடங்கவிட்டது.

அதேநேரம் ஐஆர்சிடிசி வாலட்டில் முயற்சித்தவர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய வாய்ப்பு இருந்தது. அதுவும் சில நிமிடங்களே நடந்தது. மற்றபடி மொத்தமாக ஹேங் ஆகி 15 நிமிடம் சைட்டே முடங்கிவிட்டது. தட்கல் முன்பதிவின் போது பதற்றத்தில் மாற்றி மாற்றி கிளிக் செய்துவிடாதீர்கள் .. அப்படி ஒருமுறை தவறு செய்தால் கூட புக்கிங் பண்ண முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சிறு தவறு கூட செய்யாமல் சரியான முறையில் முயற்சித்தால், எரர் எதுவும் டெக்னிக்கலாக தோன்றாத பட்சத்தில், புக்கிங் ஆக 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+