தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய இரண்டு சூப்பர் வழிகள்.. இதை பாருங்க
சென்னை: உங்கள் பெயரில் பத்திரம் இருக்கிறது.. ஆனால் பட்டா வேறு ஒருவரின் பெயரில் இருக்கிறது என்றால் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.. தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய வழிகள் உள்ளதா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்..
தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்வது என்பது இப்போது மிகவும் எளிது.. ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படுகிறது என்றால், கையோடு வருவாய் துறை மூலம் பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதேநேரம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள், பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..

தமிழ் நிலம் வெப்சைட் மூலம் பத்திரப்பதிவு செய்த பின்னர், ஆன்லைனிலேயே நீங்கள் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும். தாசில்தார் ஆபிஸுக்கு போய் அலைய தேவையில்லை.. விஏஓ , நில அளவையர் உள்பட யாருக்கும் லஞ்சமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் என்ன... கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டிய நிலை வரும். சரியான முறையில் ஆவணங்களை சமர்பித்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய முதல் வழி: தமிழ் நிலம் வெப்சைட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.. பட்டா மாறுதல் கோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இந்த முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உட்பிரிவுள்ள இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் என இரண்டு முறையில் பட்டா பெயர் மாற்ற வேண்டும்.. உட்புரிவு இல்லாத நிலம் என்றால் அதற்கான லிங்கிலும், உட்புரிவு உள்ள இனம் என்றால் அதற்கான லிங்கிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அதில் ஊர், நிலம் , பத்திரப்பதிவு எண் உள்பட அனைத்து விவரங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.. தொடர்ந்து பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன? பட்டாவிற்கு விண்ணப்பிக்க
1 கிரையப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6.அக்குவிடுதலைப் பத்திரம்
மேற்கண்ட ஆறு பத்திரங்களில் எந்த பத்திரம் உங்களிடம் உள்ளதோ அந்த பத்திரத்தின் நகலை எடுத்து வையுங்கள். பத்திரப்பதிவு செய்தவர்களின் ஆதார் அல்லது அடையாள அட்டை , முகவரி சான்றிதழ், பதிவு பத்திரம் (ஆறு பத்திரத்தில் எது உள்ளதோ அந்த பத்திரம்) போன்றவை போதும். ஆனால் பின்னர் தானப்பத்திரம், பாகப்பரிவினை பத்திரம் உள்ளிட்டவை என்றால் கண்டிப்பாக வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்) கண்டிப்பாக அந்த ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் உட்புரிவு உள்ள பட்டா வகை என்றால், 60 ரூபாய் மற்றும் 600 என இரண்டு கட்டங்கள் சேர்த்து வசூலிப்பார்கள். ஒரு உட்புரிவுக்கு 600 என ஒவ்வொரு உட்புரிவுக்கும் 600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். உட்பிரிவு இல்லை என்றால் வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இதை முடித்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்தற்காக அத்தாட்சி சான்று தருவார்கள். பட்டா பெயர் மாற்றம் செய்ய இரண்டாவது வழி: பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு இரண்டாவது வழி என்னவென்றால் இசேவை மையம் தான்.இ சேவை மையம் மூலமாக 1 கிரையப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6.அக்குவிடுதலைப் பத்திரம் ஆகிய ஆறு பத்திரங்களில் உங்கள் பத்திரம் எதுவோ அந்த பத்திரம், வில்லங்க சான்றிதழ், ஏற்கனவே பட்டா யார் பெயரில் உள்ளதோ அந்த பத்திரம் (லேட்டஸ்ட் பட்டா ), உங்கள் ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ்,, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்) ஆகியவற்றுடன் சென்றால், இசேவை மையத்திலேயே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதற்கு கட்டணம் கட்ட வேண்டும்.. இசேவை மையம் மூலம் அப்ளை செய்வது மிகவும் ஈஸியானது..
மேற்கண்ட வழிகளில் எதாவது ஒரு வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்தவர்கள் ஆதார் கார்டு,, முகவரி சான்று, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்திய சான்று உள்ளிட்ட சான்றுகள் உள்ள நகல்களுடன் விஏஓ அலுவலகத்திற்கு சென்று பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த தகவலை கூறுங்கள். அடுத்த ஒரு வாரத்தில் உங்கள் பெயருக்கு பட்டா மாறிவிடும். அதனை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications