பல்லாவரத்தில் கர்ப்பிணியை தரதரவென இழுத்து சென்று செயின் பறிப்பு.. இரு கொள்ளையர்கள் கைது
சென்னை: பல்லாவரத்தில் கர்ப்பிணியை தரதரவென இழுத்துச் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
தாம்பரம் அருகே உள்ளது ஜமீன் பல்லாவரம். இங்குள்ள ரேணுகா நகர், தர்கா ரோடு பகுதியில் கீதா (24) கர்ப்பிணி, இவரிடம் கடந்த 9-ஆம் தேதி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வீட்டு காம்பவுண்டு சுவரில் அமைக்கப்பட்டுள்ள விநாயகரை தரிசனம் செய்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கீதாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா, செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

கீதா
எனினும் கொள்ளையன் கீதாவை தரதரவென இழுத்துச் சென்றார். இதை அவ்வழியாக போவோர் வருவோர் வேடிக்கை பார்த்தனரே தவிர கர்ப்பிணி கீதாவை காப்பாற்றவோ அந்த கொள்ளையனை பிடிக்கவோ முயற்சிக்கவில்லை.

கொள்ளையர்கள்
இதையடுத்து கீதா கூச்சலிட்டதை அடுத்து கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதையடுத்து பல்லாவரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாலாஜி நகர்
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு தலைமையிலான தனிப்படையினர் செயின் பறித்த இளைஞரை அடையாளம் காண தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது விசாரணையில் செயின் பறித்த நபரின் பெயர் தினேஷ் குமார் என்பதும் அவர் மதுரை அந்தியூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் யார் என்பதையும் கண்டு பிடித்தனர். அவரது பெயர் கிரண்குமார். தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியை சேர்ந்த இவன், தினேஷ்குமாரின் நண்பன் ஆவார். இவர்கள் இருவருரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரு சக்கர வாகனம்
அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கர்ப்பிணியிடம் செயினை பறித்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் 75 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்ததும் தெரிய வந்தது. அப்போது பிடிக்க சென்ற மூதாட்டியின் வயதான கணவரையும் இருவரும் கீழே தள்ளிவிட்டு தப்பி உள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications