சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் திடீர் ராட்சத பள்ளம்! உள்ளே விழுந்த பைக்.. அந்தரத்தில் தொங்கிய லாரி
சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருசக்கர வாகனம் உள்ளே விழுந்தது. பின்னால் வந்த லாரியும் பள்ளத்தில் சிக்கி தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரட்டூரில் இருந்து கள்ளிக்குப்பம் செல்லும் வழியில் கருக்கு மேனாம்பாடு சாலையில் இன்று மதியம் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலை தடுமாறி ராட்சத பள்ளத்தில் விழுந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர், இருசக்கர வாகனம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

இருசக்கர வாகனத்துக்கு பின்னால் வந்த லோடு வாகனத்தின் ஒரு பக்க சக்கரம் பள்ளத்தில் சிக்கித் தொங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அங்கு வந்து பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராட்சத கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலைக்கு நடுவே திடீர் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒருமுறை இதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
Thoppur NH: திகில்கள் நிறைந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு "ரெட் கார்டு"! தேசிய நெடுஞ்சாலை அதிரடி! -
மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பொன்னேரி அருகே கார் கவிழ்ந்து பலி! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications