சென்னையில் அதிர்ச்சி! காதலனுடன் பிரேக் அப்! ஆத்திரத்தில் காதலி மீது பெட்ரோல் ஊற்றிய இருவர் கைது!
சென்னை: சென்னையில் காதலனை பிரிந்த காதலி மீது பெட்ரோலை ஊற்றி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பரும் யானைக்கவுணி போலீஸாரால் கைது செய்யப்பட்டன.
சென்னையை சேர்ந்தவர் அர்ஜுன் (20). இவர் உணவு டெலிவரி செய்யும் நிர்வாகியாவார், இவருடைய நண்பர் ஜேம்ஸ் (20). இதில் அர்ஜுன் 19 வயது பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அர்ஜுனின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அவருடனான காதலை அந்த பெண் முறித்துக் கொண்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன், அந்த 19 வயது பெண்ணை தன்னுடன் மீண்டும் பழகுமாறும் காதலிக்குாறும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தாராம்.
இதற்கு அந்த பெண் மறுத்துவிட்டார். அர்ஜுனின் சில நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிய அந்த பெண் அவரை மீண்டும் காதலிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் அர்ஜுன் அவ்வப்போது அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அந்த பெண் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு போய் கொண்டிருந்த போது அவரை அர்ஜுனும் அவருடைய நண்பர் ஜேம்ஸும் வழிமறித்தனர். அப்போது மீண்டும் ஒருமுறை தன்னை காதலிக்குமாறு அர்ஜுன் கேட்டாராம்.
அப்போதும் அந்த பெண் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் தனது கையில் இருந்த பெட்ரோல் எடுத்து அந்த பெண்ணின் மீது ஊற்றிவிட்டு, அப்போதும் தன்னை காதலிக்குமாறு கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த வழியாக ஆட்கள் நடமாட்டத்தை அறிந்ததும் அர்ஜுனும் ஜேம்ஸும் தப்பியோடிவிட்டனர். அந்த பெண்ணின் புகாரை அடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு












Click it and Unblock the Notifications