இன்ப்ளூயன்ஸா, டெங்கு, இப்போ டைஃபாய்டு வேற.. சென்னையில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! உஷார் மக்களே!

சென்னையில் டைஃபாய்டு காய்ச்சல் பெருகுவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டைஃபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் காரணமாக இது போன்ற நோய்கள் வருவது வழக்கம்.

ஆனால் பிப்ரவரி மாதம் பிறந்ததும் மருத்துவமனைகளில் கூட்டம் குறையாமல் இருக்கிறது. இது குறித்து கேட்ட போது சென்னையில் டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அடினோ வைரஸ்

அடினோ வைரஸ்

பாரா இன்ப்ளூயன்ஸா, அடினோ வைரஸ்கள், சுவாச ஒத்திசைவைப் பாதிக்கும் வைரஸ் போன்றவை இப்போது வரும் நோய்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. காய்ச்சல், சளி, தொண்டை வலி, தொடர் இருமல் போன்றவற்றால் குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகள் பலன் அளித்தாலும் சிலருக்கு நெபுலைசேஷன் வைக்கப்படுகிறது.

ஸ்டீராய்டு மருந்துகள்

ஸ்டீராய்டு மருந்துகள்

அது போல் ஸ்டீராய்டு மருந்துகளும் தேவைப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு இருமல் இரண்டு வாரம் வரை நீடிக்கும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் டைஃபாய்டு தொற்று ஏற்படுகிறது.

டைஃபாய்டு பாதிப்பு

டைஃபாய்டு பாதிப்பு

இந்த நோய் மே, ஜூன் மாதங்களில் நகரில் டைஃபாய்டு பாதிப்பு அதிகரிக்கும். செப்டம்பர் மாதத்திற்குள் இது குறையும். கடந்த முறையை காட்டிலும் தற்போது டைஃபாய்டு காய்ச்சலால் அதிக மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சல் சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. இது உணவை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றி விடுகிறது. இந்த பாக்டீரியா பாதித்த நபரின் மலத்தின் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவலாம்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

டைஃபாய்டு பாதித்தால் சிலருக்கு மருந்துகள் கொடுத்து குணப்படுத்த முடியும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வகையான இன்ப்ளூயன்ஸா (மர்ம காய்ச்சலால்) பாதிக்கப்படுவதாக செய்திகள் வலம் வந்தன. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக சொல்லப்பட்டது.

காய்ச்சல், தொண்டை வலி

காய்ச்சல், தொண்டை வலி

காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இன்ப்ளூயன்ஸாவின் அறிகுறிகளாகும். காய்ச்சல் ஒரு நாளைக்கு மேல் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வந்து ரத்த பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இன்ப்ளூயன்ஸாவுக்கு தடுப்பூசியும் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும் தற்போது டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் மக்கள் உஷாராக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

திட ஆகாரங்கள்

திட ஆகாரங்கள்

காய்ச்சல் என இருந்தால் திட ஆகாரங்களை விட திரவ ஆகாரங்களை உண்ணுமாறு கூறுகிறார்கள். பழச்சாறுகள், நிறைய தண்ணீர், கஞ்சி உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும். அவ்வாறு திரவ உணவுகளை அருந்தி கொண்டே வந்தால் மலம், சிறுநீர் மூலமாக வைரஸ் வெளியேறிவிடும். நீர் சத்தும் குறையாமல் இருக்கும். பெரும் பாதிப்பை தராது. இவற்றுடன் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் தகுந்த மருத்துவரை பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனே உடல், நெற்றி, கை, கால்களில் நீரை கொண்டு துடைத்து விட வேண்டும். அப்போதுதான் டெம்ப்ரேச்சர் குறையும். பிட்ஸ் வராமல் பாதுகாக்கலாம். பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்தை தர வேண்டும். என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு நாள் கழித்தும் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+