அப்படியா.. உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை பதவி தரப் போகிறதா திமுக??
Recommended Video
சென்னை: திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சி பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அதிமுக அரசையும், மத்தியில் உள்ள பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை பார்த்த வியந்த திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது மகன் முக ஸ்டாலினுக்கு முதன் முதலில் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுத்தார். அந்த வழியில் உதயநிதிக்கும், அவரது தந்தையும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என திமுகவினர் பலரும் வலியுறுத்தினார்கள்.
திமுக இளைஞரணியில் உதயநிதியை சேர்ப்பதன் மூலம் இளம் வாக்காளர்களை அதிகம் கவர முடியும் என்று திமுக தலைமையிடம் மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு இதுநாள் வரை பொறுப்புகள் கொடுப்பது பற்றி யோசித்து வந்த முக ஸ்டாலின், அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்க பச்சை கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. நாளை திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கலாம் என தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக திமுகவில் கட்சி பொறுப்பில் இணைய உள்ளார்.












Click it and Unblock the Notifications