யாருமே செய்ய தயங்கும் காரியம்.. சேப்பாக்கத்தை ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி ஸ்டாலின்! படத்தை பாருங்க
சென்னை: ஒருவரை பாராட்ட வேண்டும் என்றால் அவர்களின் செயல்கள் நமக்கு பிடித்திருக்க வேண்டும். அதுவும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று செயல்படுபவர்களை யாராக இருந்தாலும் நிச்சயம் பாராட்ட வேண்டும். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது தொகுதியில் கழிவறைகளை ஆய்வு செய்து அதை சீரமைக்க உத்தரவிட்டது சிறப்பான செயல்.
Recommended Video
கொரோனா பெருந்துதொற்று காலம் என்பதால் ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் மிகவும் துயரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் நோய் தொற்று பரவல், இன்னொரு பக்கம் ஊரடங்கால் வருமானம் பாதிப்பு என இரட்டை துயரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது மருத்துவ உதவியும், நிவாரணமும் அவசியம் தேவை.

கொய்யாத்தோப்பு
இந்த சூழலில், எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் பம்பரமாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அரசியலை தாண்டி பார்க்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் நடைபெற்ற குப்பை அகற்றும் பணி உள்ளிட்டவற்றை தொடர்ந்து நான்காவது நாளயாக உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் முடுக்கி வருகிறார்.

தடுப்பூசி ஒரே வழி
கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ள நிலையில், எல்லா பகுதிக்குள்ளும் வெகுசகஜமாக சென்று மக்களின் குறைகளை கேட்பதுடன், தடுப்பூசி ஒன்றே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க ஒரே வழி என்று பொதுமக்களிடம் வீடு வீடாக எடுத்துக்கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். வெகு இயல்பாக மக்களிடம் பேசி, அவர் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.

கழிவறை சுத்தம்
உதயநிதி தினமும் செல்லும் இடமெல்லாம் ஏழை அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைமாற்று குடியிருப்புகள், குடிசைப்பகுதிகள் தான்,
சேப்பாக்கம் தொகுதிக்கு உள்பட , முத்தையா தெருவில் கொரோனா தடுப்பு பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சிதிலமடைந்த நிலையிலிருந்த பொது கழிப்பிடத்தை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறினார்கள். அதை நேரில் சென்று பார்த்த உதயநிதி ஸ்டாலின், அங்கேயே மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, அந்த கழிப்பிடத்தை உடனே சீரமைத்துத் தருமாறு வலியுறுத்தினார்.

நிவாரணம் தருகிறார்
கொரோனா ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, கொரோனா பாதித்து தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது என தினமும் தொகுதி முழுக்க வலம் வருகிறார். பதவி ஏற்றதில் இருந்தே கடந்த ஒரு வாரமாக உதயநிதியின் ட்விட்டரை பார்த்தால் அவர் எங்கெல்லாம் சென்று வந்தார், என்னென்ன பிரச்சனைகளை சரி செய்தார் என்பது தெளிவாக தெரியும். பொதுமக்களே போக அஞ்சும் மோசமான நிலையில் இருந்த கழிவறையை ஆய்வு செய்து சரி செய்ய உடனே உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுககு உத்தரவிட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications