வரப் போகுது இளைஞர் அணி மாநாடு.. போட்டா போட்டி.. யாருக்கு சான்ஸ் தருவார் உதயநிதி?
Recommended Video
சென்னை: திமுக இளைஞர் அணியின் மாநாட்டை நடத்த உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதை நடத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி கிளம்பியுள்ளதாம்.
திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அந்த அணிக்கு செயலாளராக மிக நீண்ட காலம் இருந்து வந்தவர் மு.க.ஸ்டாலின். அவருக்குப் பிறகு அவரது மகனிடம் பொறுப்பைக் கொடுத்துள்ளனர்.
திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தனது தந்தையை விட ஒரு படி மேலே உழைத்து இளைஞரணியை பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.

உதயநிதி மாநாடு
இந்நிலையில் திமுக இளைஞரணி சார்பில் மாநாடு ஒன்றை நடத்த உதயநிதி திட்டமிட்டுள்ளார். இதனை அறிந்துகொண்ட நிர்வாகிகள், எனது மாவட்டத்தில் மாநாடு நடத்தலாம், தூள் கிளப்பிவிடுகிறேன் என உதயநிதியிடம் ஆளாளுக்கு தேதி கேட்டு வருகிறார்கள்.

நடத்த போட்டா போட்டி
மாவட்டச் செயலாளர்கள் மட்டுமன்றி இளைஞரணியில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளும், உதயநிதியிடம் தேதி பெற போட்டி போட்டு வருகின்றனர். இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள பைந்தமிழ் பாரி கோவையில் மாநாட்டை நடத்தினால், அசத்தி விடுகிறேன் என உதயநிதியிடம் தேதி கேட்டுள்ளார்.

உதயநிதிக்கு ஆச்சரியம்
அதேபோல், தூத்துக்குடியில் இளைஞரணி மாநாட்டை நடத்தலாம் என ஜோயல் தேதி கேட்கிறார். இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு மாநாடு நடத்த விருப்பப்படுவதால் உற்சாகம் அடைந்த உதயநிதி விரைவில் இடம், தேதியை அறிவிக்க உள்ளாராம்.

பலம் காட்டுவார்களா
இந்த மாநாட்டின் மூலம் உதயநிதி தன் பக்கம் திமுக இளைஞர்கள் இருப்பதை காட்ட ஆர்வமாக உள்ளார். அதேபோல, மாநாட்டை நடத்தும் பொறுப்பைப் பெறுவோர், பெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டி உதயநிதி மற்றும் ஸ்டாலின் மனதில் இடம் பிடித்து வருங்காலத்தில் பெரிய பெரிய போஸ்ட்டுகளை இலகுவாக அள்ள ஆர்வமாக உள்ளனராம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications