சினிமாவுக்கு டாட்டா.. ஃபுல் டைம் அரசியல்வாதி ஆகிறார் உதயநிதி
Recommended Video
சென்னை: மின்னல் வேகத்தில் அரசியலில் உயர்வைக் கண்ட முதல் நடிகர் என்ற பெயரை உதயநிதி ஸ்டாலின் பெற்று விடுவார் போல. அந்த அளவுக்கு அவரை படு வேகமாக தூக்கிக் கொண்டு உயரத்தில் உட்கார வைக்க திமுகவினர் தடபுடலாக ஓடிக் கொண்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்ற இடங்களில் எல்லாம் அவரின் பேச்சுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாக திமுக சீனியர் நிர்வாகிகளே ஸ்டாலினிடம் கூறினார்கள்.
மேலும், உதயநிதிக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி தரக்கோரி அனைத்து மாவட்டங்களிலும் அணி வாரியாக தீர்மானம் நிறைவேற்றி அதை அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும் தனக்கு நம்பகமான நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் ஸ்டாலின் சீரியஸாக விவாதித்தாராம்.

அப்போது தற்போதய சூழலில் அரசியல் களத்தில் கடும் போட்டி நிலவுவதால், உதயநிதி நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியல் செய்ய வேண்டும் என அறிவுஜீவிகள் ஸ்டாலினுக்கு ஆலோசனை தந்துள்ளார்களாம்.
இதனை மனதில் வைத்துக் கொண்ட ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியிடம் இது பற்றி விரிவாக பேசினார் எனக் கூறப்படுகிறது. இதனால் நடிப்புக்கு முழுக்கு போட்டு தந்தைக்கு உதவியாக முழு நேர மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
ஆந்திராவில் ஜெகன் வெற்றிக்கு காரணமே அவரது மக்கள் சந்திப்பு நடை பயணம் தான். அதையே தாமும் பின்பற்றினால் என்ன என யோசிக்கிறாராம் உதயநிதி.
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications