Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மான்கறி வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு

சேனல் விஷன் என்ற யூ டியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை குறித்து அவதூறுகளை பரப்பியதாக மதன் ரவிச்சந்திரன் மீது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் மதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

    Channel Vision Madan Ravichandran மீது வழக்கு தொடுத்த உதயநிதி | Oneindia Tamil

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், நிலத்தகராறு வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இதயவர்மன் வைத்திருந்த துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி மான்களை சுட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த மான்கறிகளை உதயநிதி ஸ்டாலினுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சர்ச்சையாக பேசி யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டிருந்தார் மதன் ரவிச்சந்திரன். தற்போது இந்த வீடியோவிற்கு எதிராக வழக்கு போட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

    Udayanithi Stalin defamation case against Madan Ravichandran who published Mankari video

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சேனல் விஷன் எனும் யூடியூப் சேனலில், மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கி சூடு என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இது தனக்கும், தனது குடும்பத்தாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கறுப்பர் கூட்டம், மாரிதாஸ், இப்போது மதன் ரவிச்சந்திரன் என சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வரும் யுடுயூப் சேனல் பதிவர்கள் வரிசையாக இப்போது சிக்கலில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+