Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று முக்கியமான நாள்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வென்று முதல் முறையாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக சட்டமன்றத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு திமுக எம்எல்ஏக்கள், திமுக தலைவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

    கோரிக்கை தீர்த்த முதலமைச்சர் மழலை குரலில் நன்றி சொன்ன Sanjana | Udhayanidhi Stalin

    உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார் என்றே 2010களில் அவர் நடிக்க வந்த புதிதில் பேசப்பட்டது. அதன்படி அரசியல் வாடைகளில் இருந்து ஒதுங்கிய உதயநிதி ஸ்டாலின், 2018ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

    சினிமாவில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் மாதம் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இநத பிரச்சாரத்தில் உதயநிதி , வழக்கமான அரசியல் தலைவகளை போல் அல்லாமல் வெகு சாதாரணமாக பொதுமக்களிடம் பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    மோடி அரசையும், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசையும் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற தேர்தலில் தேனி ஒன்றை தவிர அத்தனை இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் ஒரு காரணம் என்று அப்போது பேசப்பட்டது.

    உதயநிதி நியமனம்

    உதயநிதி நியமனம்

    இதனிடையே 2019 ஜூலை 4ம் தேதி று திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். முன்னதாக ஸ்டாலின் வகித்த பொறுப்பு என்பதால் அவரைப் போலவே உதயநிதியும் வந்த உடனே இளைஞரணி சார்பாக தீவிரமாக இறங்கி வேலை செய்தார். செயல்படாதவர்களை தூக்கிவிட்டு மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

    நீட் அரசியல்

    நீட் அரசியல்

    இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் உதயநிதி இளைஞரணியின் செயல்பாடுகளை மாற்றினார். நீட் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததுடன், அதிமுகவிடமும் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு விவகாரம் அன்று மிகப்பெரிய அளவில் விவாதமாக மாறுவதற்கு உதயநிதி செய்த அரசியல்களும் முக்கிய காரணமாகும்,.

    பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    சட்டசபை தேர்தல் நெருங்கும் போது திமுகவின் பிரச்சாரங்கள் ஹைடெக்கமாக மாறியதில் உதயநிதியின் பங்கு முக்கியமானது. மேலும் இன்றைய படித்த இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு பிரச்சனை தொடர்ந்து எழுப்பி வந்தார். ஸ்டாலினுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியதற்கு உதயநிதியும் ஒரு முக்கிய காரணம் என்று அப்போது பரவலாக பேசப்பட்டது.

    சேப்பாக்கம் எம்எல்ஏ

    சேப்பாக்கம் எம்எல்ஏ

    சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதில் உதயநிதிக்கு சீட் கொடுக்கப்படுமா? இல்லையா- என்ற கேள்வி எழுந்தது. மேலும் வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அதை எல்லாம் தனது பிரச்சாரத்தில் முறியடித்தார். சட்டசபை தேர்தலில் உதயநிதி திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது மிக வேகமாக வெற்றி அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்களில் உதயநிதியும் ஒருவர்.

    உதயநிதி அமைச்சராகவில்லை

    உதயநிதி அமைச்சராகவில்லை

    உதயநிதி ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் தீவிர பிரச்சாரத்தின் போது மதுரை எய்ம்ஸ் செங்கலை தூக்கி காட்டியது ஏக பிரபலம். இதற்காக பாஜகவும், அதிமுகவும் அவரை கடுமையாக பொறிந்து தள்ளின. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் அமைச்சசராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் அமைச்சராகவில்லை

    வாழ்த்து

    வாழ்த்து

    ஆனால் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் மக்களோடு மக்களாய் இறங்கி வேலை செய்து அவர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வது என்று அந்த மக்களை தினமும் ஆச்சர்யப்பட வைத்தார். ஆரம்பத்தில் முதல்வரின் மகன், எம்எல்ஏ என்று அந்நியப்பட்ட மக்கள் இப்போது தங்களில் ஒருவர் போல் அவரை எண்ணும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருக்கிறது. ஆட்டோவில் செல்வது, குப்பைகளை அள்ளுவதை கண்காணிப்பது. கழிவறைகளை புணரமைக்க உத்தரவிட்டது. கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அத்துடன் சகஜமாக பழகி குறைகளை கேட்பது தினமும் தொகுதி முழுவதும் வருகிறார் உதயநிதி. இதை பார்த்து பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். உதயநிதி அரசியலுக்கு வந்து அதாவது திமுக இளைஞரணி செயலாளராக வந்து மூன்றாவது ஆண்டை எட்டி உள்ளார். அவருக்கு பல்வேறு எம்எல்ஏக்கள். அரசியல் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+