கடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி!
சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டிமுன்னாள் முதல்வரும், தாத்தாவுமான கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதையை செலுத்தினார்.
கடமை தவறாத பேரன் உதயநிதி எனவும், இது எல்லாம் அரசியல் எனவும் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திமுக தொண்டர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை, சினிமா பிரபலங்களும், மற்ற துறையினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவான, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதையை செலுத்தி, அவரிடம் ஆசி பெற்றார்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தேன். தமிழினத்தின் விடியலுக்கு முத்தமிழறிஞர் காட்டிய சமூகநீதி பாதையை மனதில் நிறுத்தி இடையறாது உழைப்போம். pic.twitter.com/KftyJGPdya
— Udhay (@Udhaystalin) November 27, 2020
இது தொடர்பாக டுவிட்டரில் படத்துடன் பதிவு போட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தேன். தமிழினத்தின் விடியலுக்கு முத்தமிழறிஞர் காட்டிய சமூகநீதி பாதையை மனதில் நிறுத்தி இடையறாது உழைப்போம் என்று கூறியுளளார்.
இந்த படத்தை திமுகவினர் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இது தாத்தாவுக்கு பேரன் செய்ய வேண்டிய மரியாதை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலர் எல்லாம் அரசியலுக்குத்தான் எனவும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications