அவர் ரொம்ப ராசிக்காரர்.. இனி முழுக்க முழுக்க உதயநிதிதான்.. உள்ளாட்சி தேர்தலில் திமுக போடும் திட்டம்!
தமிழகத்தில் நடைபெற உள்ளஉள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்த வாரம் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் இதற்காக பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.
இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக சார்பாக இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல்
ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுக்க தீவிரமாக பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டங்களில் உதயநிதி கலந்து கொண்டார். தனியாகவும் இவர் கிராமசபை கூட்டங்களை நடத்தினார். அங்கு மக்களுடன் மக்களாக அவர் அமர்ந்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

உதவி
உதயநிதியின் இந்த பிரச்சாரத்தை பார்க்க பெரிய அளவில் கூட்டம் கூடியது. உதயநிதியும் மிகவும் அழகாகவே பிரச்சாரம் செய்தார். நிறைய சினிமா வசனம் பேசி அவ்வப்போது வடிவேல் வசனம் எல்லாம் கூறி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை கிண்டல் செய்தார். இதனால் அவரின் பேச்சு திமுகவினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

நல்ல ராசி
ஆனால் அதன்பின் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவில்லை. இந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதனால் உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியான நபர். அவர் பிரச்சாரம் செய்தால் திமுகவிற்கு வாக்குகள் குவிகிறது என்று ஒரு நம்பிக்கை கட்சியினர் இடையே உள்ளது.

என்ன பிரச்சாரம்
இதனால் மீண்டும் தமிழகத்தில் நடைபெற வுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்த வாரம் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் இதற்காக பிரச்சாரம் செய்ய உள்ளார். மொத்தம் 10 நாட்கள் அவர் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய உள்ளார்.

எப்படி செய்வார்
அதன் அடிப்படையில் தமிழகத்தில் கிராமம் கிராமமாக சென்று, உதயநிதி ஸ்டாலின் கூட்டங்களை நடத்த உள்ளார். கிராம் சபை கூட்டங்களை நடத்தி உதயநிதி பேசுவார். திமுக தலைவர் ஸ்டாலின் பெரிய கூட்டங்களில் மட்டும் கலந்து கொண்டு பேசுவார் என்று கூறுகிறார்கள்.

வேறு என்ன
பிரச்சார பணிகளை ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் இருவரும் சரியாக பிரித்துக் கொள்வார்கள். இவர்கள் இருவரும்தான் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. கனிமொழி தென் மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார்












Click it and Unblock the Notifications