மத்திய சென்னை திமுக வேட்பாளர் யார்? சட்டுன்னு சஸ்பெண்ஸ்சை உடைச்சுட்டாரே உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர் யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டாலும் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு என ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் பிரச்சாரத்தையும் மற்றொரு பக்கம் தொடங்கி விட்டது.

சென்னை கிழக்கு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இப்போது எல்லாம் தூக்கத்துல கூட சேகர்பாபுதான் வருகிறார். என் மீதும் தலைவர் மீதும் பேரன்பு கொண்டவர் சேகர்பாபு. அந்த அளவிற்கு நிறைய நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இந்த விழாவை முடித்து விட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செல்லப்போகிறேன்.
மத்திய சென்னை தொகுதிக்கு பிரச்சாரம் முடிந்து விட்டது வேட்பாளர் யார் என்று உங்களுக்குத் தெரியும். நான் நிறைய முறை சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்து விட்டேன். கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த லோக்சபா தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
எத்தனையோ முறை உங்களை சந்தித்து இருக்கிறேன் இன்றைய தினம் தலைவர், முதல்வரின் பிறந்தநாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வாய்ப்பை அளித்த சேகர்பாபுவிற்கு நன்றி. தலைவரின் 71வது பிறந்தநாள். நம்முடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறோம்.
எத்தனை நிகழ்ச்சி நடத்தினாலும் திமுகவிற்காக ரத்தம் சிந்திய மக்களுக்கு பொற்கிழி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார் தலைவர். 45 கோடி ரூபாய் பொற்கிழி கொடுத்திருக்கிறோம்.
திமுகவிற்காக பாடுபட்டவர்களுக்கு பொற்கிழி தருகிறோம். இன்றைய தினம் பெண்களுக்கு ஸ்கூட்டர் மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் ஊக்கத்தொகை, திமுகவிற்காக உழைத்த முன்னோடிகளுக்கு ரூ.10 ஆயிரம் தருகிறோம் என்று சொன்னார் உதயநிதி ஸ்டாலின்.
மத்திய சொன்னை தொகுதியில் தயாநிதி மாறனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் உதயசூரியனுக்கு ஓட்டு போடும் அளவுக்கு தெளிவானவர்கள் என்றார். திமுகவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே மத்திய வேட்பாளர் யார் என்று சஸ்பென்ஸ் உடைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications