3 பெண் அர்ச்சகர்களுக்கு உதயநிதி சர்ப்ரைஸ் கிஃப்ட்! சந்திப்பில் நடந்து என்ன?
சென்னை: 'இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம்' இதுதான் திமுகவின் கொள்கை. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. சிலர் தொட்டால் தீட்டு, சிலர் பார்த்தாலே தீட்டு என அடிமை முறைகள் இன்னும் முற்றாக ஒழிந்துவிடவில்லை.
இதில் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். அதை எல்லாம் படிப்படியாக மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டியதில் திமுகவுக்கு முக்கியமான இடம் உண்டு.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, இந்தியாவிலேயே எங்கு நடைமுறையில் இல்லாத அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு மாபெரும் சட்டத்தைக் கொண்டுவந்தார்.
ஆனால் அதை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ 1972இல் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இந்தச் சட்டத்திருத்தம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது.

அந்த அதிரடியான தீர்ப்பால், இன்றைக்கு மூன்று பெண்கள் கருவறைக்குள் அர்ச்சகர்களாகக் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்" என்று மகிழ்ச்சி பொங்கக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதைப்போலவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இம்மூவரையும் அழைத்து ஆண்ட்ராய்டு மொபைல் போனை சர்ப்ரைஸ் ஆக பரிசளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள இந்த 3 பெண் அர்ச்சகர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன?
முதலில் நம்முடன் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தார் இளம் பெண் அர்ச்சகர் ரம்யா. "நான் விருத்தாசலம் பக்கமுள்ள திட்டக்குடி அருகே இருக்கின்ற மேலாதனூரில்தான் வசித்து வருகிறேன். படித்து வளர்ந்தது எல்லாம் இங்கேதான். நான் எம்.எஸ்.சி., கணிதம் படித்திருக்கிறேன்.

படித்து முடிந்த நேரத்தில்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். எனக்கு அர்ச்சகராக ஆகவேண்டும் என்று ஆசை இருந்தது. உடனே ஸ்ரீரங்கம் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தேன். அரசு முழு சலுகைகளைக் கொடுத்து என்னைப் படிக்க வைத்தது. ஒரு பைசா செலவில்லை. அனைத்து செலவையும் அரசாங்கமே செய்தது.
அத்துடன் மாதம் 3 ஆயிரம் உதவித்தொகையும் கொடுத்தார்கள். இப்போதுதான் படித்து முடித்ததற்கான சான்றிதழைத் தந்தார்கள். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு கையால் பெற்றோம். அதிலும் முதல் பெண் அர்ச்சகராக நாங்கள் மூன்று பேர் தேர்வாகி இருக்கிறோம்.

முதல் பெண் அர்ச்சகர் எனச் சொல்லிக் கொள்வதற்கு நான் பெருமைப்படுகிறேன். இதைக் காலங்காலத்திற்கு மறக்கவே முடியாது. அதனால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களைப் பார்த்து வருங்காலத்தில் நிறையப் பெண்கள் வருவார்கள். அதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கிறோம்.
இந்த மாதிரி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்ததற்காகவும் அதில் என்னையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்ததற்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருக்கு எனது மிகப் பெரிய நன்றி" என்கிறார்

தொடர்ந்து பேசிய அவர், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களைப் பார்க்க வேண்டும் என்றார். அவரது அலுவலகத்திற்கு வந்தோம். எங்களை வாழ்த்தினார். அத்துடன் எங்களுக்கேத் தெரியாமல் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால், உள்ளே ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தது. மூன்று பேருக்குமே கொடுத்தார். அதில் பெரிய மகிழ்ச்சி.
அப்போது, 'இந்தத் துறையை ஏம்மா நீ தேர்ந்தெடுத்த?'என்று கேட்டார். அரசாங்கம் எங்களைப் போன்ற பெண்கள் அர்ச்சகர்களாக வரவேண்டும் என்று எவ்வளவு சட்டப் போராட்டங்களைச் செய்திருக்கிறது. அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி எங்களை இன்றைக்குக் கருவறைக்குள் கொண்டு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்" என்கிறார்

ரம்யாவின் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் கிருஷ்ணவேணி. அவரும் இன்றைக்கு முதல் பெண் அர்ச்சகர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்?
"எனக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே உள்ள மேலாதனூர் கிராமம்தான் சொந்த ஊர். அப்பா அம்மா இரண்டு பேரும் விவசாயிகள்தான்.

அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதற்காக ஸ்ரீரங்கம் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தேன். பிரபந்தம், ஆகமம், ஜோதிடம் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்கள்.
மூன்றாவது அர்ச்சகர் ரஞ்சிதா, "நான் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவள். அப்பா அம்மா இருவரும் விவசாயிகள். எங்கள் குடும்பமே விவசாய குடும்பம்தான். அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரியில்தான் என் படிப்புகளை எல்லாம் முடித்தேன்.

அப்போதுதான் முதலமைச்சரின் அர்ச்சகர் திட்டம் பற்றி அறிந்தேன். உடனே ஓர் ஆர்வம். ஸ்ரீரங்கம் பயிற்சி பள்ளியில் சேர்ந்து முறையாக ஒரு வருடம் படித்தேன். முதல் பெண் அர்ச்சகர்களில் நானும் ஒருவளாக தேர்வாகி இருக்கிறேன். வருங்காலத்தில் இந்தத்துறையில் சாதித்துக்காட்டுவேன் என்று நம்பிக்கை நிறையவே இருக்கிறது" என்கிறார்
இன்று மூன்று பேர், நாளை மூவாயிரம் ஆக வாழ்த்துகள்!

-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications