படப்பிடிப்பு தளத்துக்கு படையெடுக்கும் உ.பி.க்கள்.. ஷூட்டிங்கிற்கு நடுவில் மீட்டிங் நடத்தும் உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது படப்பிடிப்பில் உள்ள நிலையில், அவரை காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் திரள்கின்றனர்.

பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து பெற வேண்டி கட்சிக்காரர்கள் வருவதால் அவர்களை தடுக்க மனமின்றி படப்பிடிப்பு இடைவேளையின் போது புன் முறுவலுடன் சந்தித்து பேசி அனுப்பி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கோவை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், இடையே இயக்குநரின் மனைவி மரணம், தேர்தல் பிரச்சாரம், உதயநிதியின் தொகுதிப் பணிகள் காரணமாக படப்பிடிப்பு தொய்வடைந்தது. இந்நிலையில் இப்போது முழு மூச்சாக படப்பிடிப்பு நடந்து வருவதால் அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வருகிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனிடையே திமுக இளைஞரணி நிர்வாகிகள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள், உள்ளிட்ட இன்னும் பல காரணங்களுக்காக உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற வேண்டி கோவைக்கு படையெடுக்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் படப்பிடிப்பை பார்க்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தை விட தனிப்பட்ட முறையில் உதயநிதியை சந்தித்து ஊர் திரும்பினால் போதும் என நினைக்கின்றனர்.

 இளைஞரணி

இளைஞரணி

இதனால் படப்பிடிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் தள்ளியே நிற்கும் கட்சியினரை, தனக்கு கிடைக்கும் இடைவேளையில் சந்தித்து பேசி அனுப்பி வைக்கிறார் உதயநிதி. இது அவரை காணச் செல்லும் கட்சியினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதனிடையே திமுக இளைஞரணி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் உதயநிதி சந்திக்கிறார்.

அதிக எண்ணிக்கை

அதிக எண்ணிக்கை

திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அந்த அணியில் அதிகளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுத்தவர் உதயநிதி. இந்நிலையில் அதிமுகவில் உள்ள இளம்பெண்கள் பாசறையை போல் விரைவில் இளம் பெண்களையும் அதிகளவில் திமுக இளைஞரணியில் இணைத்து அவர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+