ஆதவ் அர்ஜுனா - விஜய் - எடப்பாடி.. ஒரே வாரத்தில் உதயநிதியின் ஆல்-ரவுண்ட் அட்டாக்.. கவனிச்சீங்களா?
சென்னை: தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க-வின் 'ஸ்டார் கேம்பைனர்' உதயநிதி ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வரும் சூறாவளிப் பிரச்சாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் தொடங்கி திருச்சி வரை அவர் வீசிய அரசியல் ஏவுகணைகள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.

வில்லிவாக்கத்தில் 'டெபாசிட்' சவால்!
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திக்கை ஆதரித்து உதயநிதி பேசிய பேச்சு, அந்தப் பகுதியே அதிரும் வகையில் அமைந்தது. வி.சி.க-விலிருந்து விலகி 'விஜய் டீமில்' ஐக்கியமாகியுள்ள ஆதவ் அர்ஜுனாவை நேரடியாகக் குறிவைத்த உதயநிதி, "இங்கே போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, தி.மு.க வேட்பாளர் கார்த்திக்குக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும்" என அதிரடியாக முழங்கினார்.
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நகர்வுகளை 'சீசன் வியாபாரம்' என மறைமுகமாகச் சாடிய உதயநிதி, வில்லிவாக்கம் எப்போதும் தி.மு.க-வின் கோட்டை என்பதைத் தனது பாணியில் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
திருச்சி ஈஸ்ட்டில் 'ஒர்க் ஃபிரம் ஹோம்' அட்டாக்!
திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்துப் பேசிய உதயநிதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார். விஜய்யின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காமல், "சிலர் அரசியலுக்கு வந்துவிட்டு, வீட்டில் உட்கார்ந்துகொண்டே ட்வீட் போடுகிறார்கள். இது என்ன 'ஒர்க் ஃபிரம் ஹோம்' அரசியலா?" எனத் தனது நக்கல் பாணியில் கிண்டலடித்தார்.
நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சில அறிவாளிகள் கேட்கிறார்கள். இது கூட தெரியாத தற்குறி கூட்டத்திடம் என்ன கேட்பது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஒரு தொகுதி தான் என்பதை தற்குறி கூட்டத்திடம் எப்படி புரிய வைப்பது. கொரோனா லாக்டவுன் போல சிலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
நாம் அவர்களை போல பிரேக் விட்டு பிரேக் விட்டு பிரச்சாரம் செய்யவில்லை. சிலர் இன்று ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகிவிட்டனர். நாம் ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம். சோர்வடையாமல் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். உலகமே கொரோனா லாக்டவுனில் முடங்கியிருந்தது. அப்போது கூட திமுகவினர் மக்களுக்கு என்ன தேவையோ அதை களத்தில் இறங்கி செய்தோம்.
மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கத் துணிவில்லாதவர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அரசியல் பேசுவது தமிழகத்தில் எடுபடாது" என அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லீமா ரோஸ் குடும்ப அரசியல்: உதயநிதி காட்டிய 'ரூட்'!
அதே நாள் மற்றொரு முக்கியப் பிரமுகரான அதிமுக லீமா ரோஸையும் அவர் விட்டுவைக்கவில்லை. லீமா ரோஸின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பிரிந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, "ஒரே குடும்பத்தில் ஆளாளுக்கு ஒரு கட்சியில் இருந்துகொண்டு மக்கள் சேவை செய்யப் போகிறார்களா அல்லது குடும்பத்தைப் பாதுகாக்கப் போகிறார்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
எடப்பாடியை வறுத்தெடுத்த 'ட்ரோல்' பாலிடிக்ஸ்!
கடந்த ஒரு வாரமாகவே உதயநிதியின் ஹிட் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சேலம் தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை எடப்பாடியின் பழைய வீடியோக்களையும், அவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளையும் மேடையிலேயே 'ட்ரோல்' செய்து வருகிறார் உதயநிதி.
"பாஜக-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு, இப்போது வெளியே நாடகமாடும் எடப்பாடியின் வேஷத்தை மக்கள் கலைப்பார்கள்.. காலில் விழுந்த புகைப்படத்தை காட்ட மாட்டேன் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு.. " என அவர் வறுத்தெடுப்பது, அ.தி.மு.க தரப்பை கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரே வாரத்தில் விஜய், எடப்பாடி பழனிசாமி, ஆதவ் அர்ஜுனா, லீமா ரோஸ் என ரவுண்டு கட்டி அடித்திருக்கும் உதயநிதியின் இந்த வேகம், 2026 தேர்தல் களத்தில் தி.மு.க-வின் ஆதிக்கத்தை இப்போதே நிலைநாட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications