உதயநிதி ஸ்டாலினுக்கு புது பதவி.. அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராக நியமனம்
சென்னை: அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுக தலைவரின் மகன் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இவர், தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே, அமோக வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளார்.

அமைச்சர் பதவி
ஏற்கனவே திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தற்போதைய அமைச்சரவையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

தொடர் லைம் லைட்
இருப்பினும் தொடர்ந்து சுறுசுறுப்பாக தனது தொகுதியில் தேவைப்படும் பணிகளை செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து ஏதாவது ஒரு செய்திகளில் உதயநிதி ஸ்டாலின் பெயரும் அடிபட்டுக் கொண்டே உள்ளது.

புது பதவி
எனவே உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும் என்ற பேச்சு சமீபகாலமாக திமுகவில் எதிரொலித்தது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சபாநாயகர் அப்பாவு, வெளியிட்ட ஒரு அறிவிப்பில், அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவும், விமர்சனங்களும்
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பதவி என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும். எனவே, இதில் தனது திறமையை உதயநிதி ஸ்டாலின் காண்பிப்பார் என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் திமுகவினர். அதேநேரம், கல்வியாளர்களில் யாரையாவது நியமனம் செய்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகளை சார்ந்தோர் தரப்பில் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன் வைக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

உதயநிதி ஸ்டாலின் நன்றி
இதனிடையே, தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில், கல்வித்தளத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம். அதன் அலுவல் சாரா ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் - அறிவிப்பை வெளியிட்ட பேரவைத்தலைவர் அண்ணன் அப்பாவு அவர்களுக்கும் என் நன்றி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications