உதயநிதி ஸ்டாலின் கைதை கூட விஜய் அரசு ஒழுங்காக செய்யாதா? தவெகவின் நூறு நாளில் காலி தியேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 நாள் தவெக ஆட்சி சிறப்பாக இருப்பதாக தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், தவெக அரசு எதையுமே செயல்படுத்த முடியாத, முற்றிலுமாக செயல்படாத மற்றும் கையாலாகாத ஒரு அரசாக உள்ளது. இந்த 100 நாட்களில் இந்த அரசு இத்தகைய தோல்விகளை மட்டுமே கொடுத்துள்ளது என்று திமுக கடுமையாக சாடியிருக்கிறது.

Liberty tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் திமுக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர்.. அதில் பேசும்போது, "தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது சொல் ஒன்று, செயல் வேறாக இருக்கிறது. தியேட்டரில் ஆள் இல்லாமல் 100 நாட்கள் படத்தை ஓட்டுவது போலத்தான் இந்த ஆட்சியும் ஓடிக்கொண்டிருக்கிறது.

Udhayanidhi Stalin Arrest

போக்குவரத்துத் துறை அமைச்சர் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்தார். ஆனால் நடைமுறையில் சேலம் மாவட்டத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு எங்கே

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்கெட்டுப் போய்விட்டது. நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதானவர் ஜெயிலிலேயே இறந்துபோனார். இதைப் பற்றி இந்த அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அதேபோல போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக நின்ற காரணத்தால் கோவை மாணவன் அமுதன், திருவொற்றியூர் தனுஷ் ஆகிய 2 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய காவேரி தண்ணீரை பெற கர்நாடகாவிடம் இருந்தோ அல்லது மத்திய அரசிடம் இருந்தோ எந்தவித உத்தரவாதத்தையும் பெறாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் செங்கிப்பட்டி ஸ்டேஷன்

இதை பற்றி பேசினால் எதிர்க்கட்சி தலைவரை தஞ்சாவூருக்கு செல்லவிடாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் அடைத்து வைக்கிறார்கள். ஜாமீனில் வரக்கூடிய வழக்குகளுக்கு பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான ஒன்றாகும். தஞ்சாவூருக்குள் நுழையவே முடியாது என்ற சூழலை உருவாக்கி, அவரைச் செங்கிப்பட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததாக சொல்கிறார்கள்.. ஆனால் சட்டப்பிரிவுகளை பார்த்தால் 7 பிரிவுகள் மட்டுமே வேறு மாதிரியாக போடப்பட்டிருக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் கைது

பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்லி கைது செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. கோர்ட் கேள்வி கேட்கும்போது "நாங்கள் ஜாமீனில் விட்டுவிடுகிறோம், விசாரணைக்குத்தான் அழைத்து செல்கிறோம்" என்று காவல்துறை முரண்பாடாகப் பேசுகிறது.

கைது செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத வழக்கில், ஜாமீனில் வர முடியாத பிரிவுகளை போட்டு உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய முற்பட்டது இந்த அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கைதைக்கூட உருப்படியாகச் செய்ய முடியாத அளவுக்கு நிர்வாக இயந்திரம் முடங்கிக் கிடக்கிறது.

சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகம்

போதைப்பொருள் தடுப்பில் இந்த அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஆகஸ்ட் 15 அன்று முதலமைச்சர் வழங்கிய விருதுகள் அனைத்தும் கடந்த 3, 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உள்துறையின் கீழ் சிறப்பாக பணியாற்றியதற்காக கிடைத்த சாதனைகளே தவிர, இந்த 100 நாள் சாதனை அல்ல.

சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் மலிந்து கிடக்கிறது. அரசு வழக்கறிஞர் பொறுப்பை பெறுவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இந்த 100 நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு புதிய திட்டத்திற்குக்கூட இந்த அரசு அடிக்கல் நாட்டவில்லை. தவெக தலைவர் விஜய் பார்வையிட்ட பாலக் கட்டுமான பணிகளும்கூட திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டமே தவிர, இந்த ஆட்சியின் திட்டம் அல்ல." என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+