Udhayanidhi Stalin Arrest LIVE: சென்னை வந்ததும்.. இரவோடு இரவாக மு.க ஸ்டாலினை சந்தித்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சை செங்கிப்பட்டியில் போலீஸ் விசாரணை முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வரும், தந்தையுமான மு.க ஸ்டாலினை இரவோடு இரவாக நேரில் சந்தித்தார்.

Udhayanidhi Stalin Arrest LIVE  Protest over Trisha remark during Cauvery stir

Aug 05, 2026, 2:13 am IST

தஞ்சை செங்கிப்பட்டியில் போலீஸ் விசாரணை முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வரும், தந்தையுமான மு.க ஸ்டாலினை நள்ளிரவில் நேரில் சந்தித்தார்.
Aug 04, 2026, 11:38 pm IST

செங்கிப்பட்டியில் விசாரணை முடிந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டார். இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
Aug 04, 2026, 9:15 pm IST

நான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன்; ஆனால் அது எதற்கும் தவெகவிடம் பதில் இல்லை- உதயநிதி
Aug 04, 2026, 9:15 pm IST

ஆனால், நான் சொல்லாத விஷயத்தை கட், காபி பேஸ்ட் செய்து அவதூறு பரப்புகிறார்கள்- உதயநிதி
Aug 04, 2026, 9:15 pm IST

நான் யாரை பற்றியும் தவறாக பேசவில்லை; முழுக்க முழுக்க விவசாயிகளை பற்றி மட்டுமே பேசினேன்- உதயநிதி
Aug 04, 2026, 9:15 pm IST

நாளை சட்டசபை தொடங்கவுள்ளதால் திட்டமிட்டு எனது பேச்சை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை- உதயநிதி
Aug 04, 2026, 9:15 pm IST

ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை தான் தவெக அரசு பின்பற்றுகிறது - உதயநிதி
Aug 04, 2026, 9:15 pm IST

விவசாயிகள் பிரச்சினைக்காக திமுக சார்பில் நேற்றைய தினம் மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம்- உதயநிதி
Aug 04, 2026, 9:14 pm IST

நேற்றைய தினம் கூட்டத்தில் நான் மொத்தம் 25 நிமிடங்கள் பேசினேன்- உதயநிதி
Aug 04, 2026, 9:14 pm IST

தவெக கொடுத்த பொய்யான வாக்குறுதிகள், விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன்- உதயநிதி
Aug 04, 2026, 9:14 pm IST

கர்நாடகா காவிரி நீரையும் திறந்துவிடவில்லை; மேகதாதுவில் அணை கட்டுவதிலும் தீவிரமாக இருக்கிறார்கள்- உதயநிதி
Aug 04, 2026, 9:14 pm IST

திமுக ஆட்சியில் எல்லா ஆண்டும் சரியான நேரத்தில் தண்ணீரை திறந்து விட்டுள்ளோம்- உதயநிதி
Aug 04, 2026, 9:14 pm IST

கர்நாடகாவிடம் நீரை பெற்று தர இந்த தவெக அரசுக்கு தேம்பு இல்லை, திராணி இல்லை- உதயநிதி
Aug 04, 2026, 9:14 pm IST

திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு
Aug 04, 2026, 8:55 pm IST

செங்கிப்பட்டியில் போலீஸ் விசாரணை நிறைவடைந்ததும் வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின்ற மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காரில் திருச்சி விமான நிலையம் புறப்பட்ட உதயநிதிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். காரில் புறப்பட்ட உதயநிதி, திருச்சியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு சென்னை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 04, 2026, 8:46 pm IST

இன்று இரவே சென்னை திரும்பும் உதயநிதி

செங்கிப்பட்டியில் இருந்து காரில் புறப்பட்ட உதயநிதி, திருச்சியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு சென்னை வந்தடவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 04, 2026, 8:28 pm IST

சென்னை புறப்பட்ட உதயநிதி

செங்கிப்பட்டியில் வைத்து உதயநிதியிடம் மாலை 6.50 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்றது. போலீஸ் நிலைய ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்பட்ட நிலையில் தனது காரில் உடனடியாக சென்னை புறப்பட்டார்.
Aug 04, 2026, 8:23 pm IST

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. இதையடுத்து தனது காரில் உதயநிதி சென்னை புறப்பட்டுள்ளார். உதயநிதி விடுவிக்கப்பட்டதும் அங்கு திரண்டு இருந்த திமுகவினர் உற்சாகத்தில் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
Aug 04, 2026, 8:21 pm IST

இன்று காலை 10.50 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார்
Aug 04, 2026, 8:21 pm IST

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உதயநிதியை விடுவிக்கும் வரை நகர மாட்டோம் என்று காவல் நிலையம் முன்பாக திரண்டுள்ள திமுகவினர் கூறினர். கொட்டும் மழையிலும் தொடர்ந்து திமுகவினர் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Aug 04, 2026, 7:56 pm IST

எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில் உதயநிதியிடம் கேள்விகள் எழுப்பி விசாரணை
Aug 04, 2026, 7:56 pm IST

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் போலீசார் விசாரணை
Aug 04, 2026, 7:55 pm IST

9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் காவல் நிலையத்தில் விசாரணை
Aug 04, 2026, 7:21 pm IST

இன்று இரவுக்குள் விசாரணை முடியுமா?

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் விசாரணை முடியுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது. நாளை காலை தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் இன்று இரவுக்குள் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கைது செய்யக்கூடாது இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
Aug 04, 2026, 7:18 pm IST

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் திமுகவினர் அங்கு ஏராளமானோர் திரண்டனர். போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால் போலீசார் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Aug 04, 2026, 7:04 pm IST

செங்கிப்பட்டியில் போலீசார் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்படும் நிலையில், வெளியே குவிந்து இருந்த திமுகவினர் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீஸ் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
Aug 04, 2026, 6:51 pm IST

செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி அழைத்து வரப்பட்ட நிலையில், வேனில் இருந்து இறங்க மறுத்த அவர், சிறிது நேரம் கழித்து காவல் நிலையத்திற்குள் சென்றார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Aug 04, 2026, 6:40 pm IST

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்துவது என்றால் வேனில் இருந்து இறங்க மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் தான் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எனவும் உதயநிதி போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Aug 04, 2026, 6:37 pm IST

வாகனத்தை விட்டு இறங்காமல் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்துவதாக கூறிவிட்டு அங்கு திமுகவினர் அதிகளவில் திரண்டதால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்றனர். ஆனால் உயர் நீதிமன்றம் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் என கூறியதால் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்காமல் உள்ளார்.
Aug 04, 2026, 6:30 pm IST

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு உதயநிதியை அழைத்து சென்ற போலீஸ்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+