கோட் சூட்டுக்கு NO சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு டி ஷர்ட் தான் காஸ்டியூம்!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டைலிஷாக கோட் சூட்டுடன் காட்சியளித்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட், ஜீன்ஸ் என வழக்கமான சிம்பிள் காஸ்டியூமிலேயே கலந்துகொண்டார்.
சென்னையில் இன்று காலை தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு நாளை மாலை வரை நடைபெற உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வரும் பல்வேறு முக்கிய முயற்சிகளில் ஒன்றாக இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகள் அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான பெகட்ரான், மிட்சுபிஷி, கோத்ரெஜ், ஹூண்டாய், உள்ளிட்ட இன்னும் பல நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. முன்னதாக மாநாட்டை தொடங்கி வைக்க வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவருடன் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். உலகம் முழுவதும் இருந்தும் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதால் முதலமைச்சரின் காஸ்டியூமிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஸ்டைலிஷாக கோட் சூட்டுடன் அவர் மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜீன்ஸ், டி ஷர்ட் என மிகவும் இயல்பான காஸ்டியூமுடன் மாநாட்டில் கலந்துகொண்டார். அதிகாரிகள் உட்பட அனைவருமே டிப் டாப்பாக கோட் சூட் அணிந்து காட்சியளித்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மட்டும் கோட் சூட்டுக்கு நோ சொல்லிவிட்டு கேசுவலாக வந்து சென்றிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அமைச்சராக பதவியேற்ற அன்று கூட கிளீன் ஷேவ் செய்து, ஃபார்மலாக தன்னை மாற்றிக்கொள்ளாமல் எப்போதும் போல கேசுவலான காஸ்டியூமிலேயே பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆகப் போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலா வரும் நிலையில் அப்போதாவது அவரது காஸ்டியூமில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications