வளர்பிறை நாளில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த திமுக!
உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று புதிய பொறுப்பு தர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி தலைமை பொறுப்பு தரப்பட்டுள்ளது. இன்றைய நாளில் இந்த பொறுப்பு வழங்கப்படுகிறது தெரியுமா.. எல்லாம் வளர்பிறைதான் காரணம்!
மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்டார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லைதான்.
அதனால் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பல்வேறு பதவி, பொறுப்புகளை ஏற்பது வழக்கம்.

வேட்பாளர்கள்
குறிப்பாக ஜெயலலிதா, எந்தச் செயலையும் நல்ல நாள், நேரம் பார்த்து செய்வார். அவர் மட்டுமில்லை, கட்சியில் உள்ள அதிமுக வேட்பாளர்களாகட்டும், அல்லது இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகட்டும்.. எல்லோருக்கும் இதே உத்தரவுதான் பிறப்பிப்பார்.

புதிய பொறுப்பு
இப்படி ஒரு செயல்பாடு, மறைந்த கருணாநிதியில் இருந்து அன்புமணி வரை தொடர்ந்து நீடித்தே வருகிறது. அதேதான் இன்றைக்கும் நடந்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு தரப்படும் என்ற பேச்சு 2 மாதமாக எழுந்து வருகிறது.

சுற்றுப்பயணம்
திருச்சி கூட்டத்தில் இதற்காக தீர்மானமே போட்டுவிட, மற்ற மாவட்ட நிர்வாகிகளும் தலைமைக்கு தங்கள் விருப்பத்தை சொல்லி வந்தார்கள். இதனிடையே ஸ்டாலின் ஃபாரீனுக்கு சுற்றுப்பயணம் போய்விடவும், எப்படியும் நாடு திரும்பியவுடன் உதயநிதிக்கு இளைஞர் அணி தலைமை பொறுப்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வளர்ப்பிறை?
ஆனால் அது இன்றுதான் தரப்படுவதாக முடிவானது. இதற்கு காரணம், இன்று வியாழக்கிழமை... வளர்பிறை.. அதனால்தான் இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நல்ல நேரம் பார்த்துதான் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்படியே, தற்போது உதயநிதிக்கு புதிய தலைமை பொறுப்பு தரப்பட்டுள்ளது. கருணாநிதி குடும்பத்தின் 3-வது தலைமுறையும் வளர்பிறையை நோக்கியே தனது பயணத்தை தொடங்க உள்ளது என்றாலும், "நலிந்தோர்க்கு இல்லை நாளும் கிழமையும்" என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications