எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி
சென்னை: திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எனக்கு தொண்டையில் கட்டி இருப்பதால் பிரச்சாரம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் சொன்னாங்க.. பிரச்சாரத்தை எல்லாம் ரத்து செய்யுங்க என மருத்துவர்கள் சொன்னாங்க.. ஆனால் நான் முடியாது என்று சொல்லி பிரச்சாரம் செய்கிறேன்" என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி ரொம்ப டென்ஷன் ஆகுகிறார்.. இனி கெட்டவார்த்தையில் கூட பேசுவார் போல என்றும் கலாய்த்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் என முக்கிய தலைவர்கள் பலரும், தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றும் வில்லிவாக்கம், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செல்லும் இடங்க ளில் எல்லாம் பொது மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து தங்கள் வாக்கு உதயசூரியனுக்கு தான் என்று உறுதியளித்தனர்.
அப்போது மண்ணடி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எல்லாரும் முரட்டு பக்தர்கள் கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனால் முரட்டு அடிமையை பார்த்து இருக்கீங்களா.. இதை நான் பேசினதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது. இப்போது எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், உதயநிதி எப்போது இறந்து போயிருக்கனும். ஆனால் உயிரோடு வந்து என் உயிரை வாங்குகிறார் என்று சொல்லிவிட்டார். ரொம்ப டென்ஷன் ஆகுகிறார்.
ரொம்ப டென்ஷன் ஆகுகிறார்
உதயநிதிக்கு அனுபவம் இல்லை இல்லை என்று சொல்கிறார்.. ஆமா உங்களே மாதிரி எனக்கு அனுபவம் இல்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்திருக்கும் படத்தை காண்பித்தார். இந்த மாதிரி எனக்கு அனுபவம் இல்லை.. சங்கி கூட்டத்திற்கு பயப்படும் அனுபவம் எனக்கு இல்லை.. இதைத் தான் நான் சொன்னேன்..
ஆனால் இதை சொன்னதற்கு ரொம்ப கோபப்படுகிறார்.. ரொம்ப திட்டுகிறார். டென்ஷன் ஆகுகிறார். இன்னும் கொஞ்ச நாளில் கெட்ட வார்த்தை எல்லாம் போட்டுவிடுவார் போல.. எதற்கும் தயாராக இருந்துகொள்வோம்.. எடப்பாடி பழனிசாமி நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கியமாக இருக்கட்டும். அவர் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராகவே இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு கெத்து" என்று பேசினார்.
தொண்டையில் கட்டி இருப்பதால்..
தொடர்ந்து திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "எனக்கு தொண்டையில் கட்டி இருப்பதால் பிரச்சாரம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் சொன்னாங்க.. பிரச்சாரத்தை எல்லாம் ரத்து செய்யுங்க என மருத்துவர்கள் சொன்னாங்க.. ஆனால் நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன்.. எங்களை நம்பி இருக்கும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யாமல் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு இங்கு பிரச்சாரம் செய்ய வந்துவிட்டேன்" என்று பேசினார்.
-
தேசிய அரசியலில் ஸ்டாலின் 'ரைசிங்'.. கோவப்பட்ட மம்தா? ராகுலின் மௌன யுத்தம்.. பின்னணி என்ன? -
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி -
B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம் -
"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்! -
சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்விஸ்ட் -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
“எனக்கா வயசாகிருச்சு? என்னுடன் நடை போட்டிக்கு எடப்பாடி தயாரா?”.. துரைமுருகன் சவால்! -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
100 பேரை வேணாலும் இறக்குங்க.. பார்த்துக்கலாம்.. கோவையில் சம்பவத்திற்கு தயாரான செந்தில் பாலாஜி -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங்












Click it and Unblock the Notifications