''வருங்கால முதலமைச்சர் உதயநிதி.. வேண்டாம்ணு சொன்னா நாங்க விட்ருவோமா''? திமுக தொண்டர் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நிறுத்தச் சொன்ன உதயநிதி: நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்தை பெற வந்த போது, வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என உரத்த குரலில் அங்கிருந்த திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த உதயநிதி, அந்த நிர்வாகியை பார்த்து போதும் நிறுத்துங்க, அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் என்பதை கையால் சைகை செய்தார்.

''வேண்டாம்ணு சொன்னா விட்ருவோமா''? : வேண்டாம்னு சொன்னால் நாங்க விட்ருவோமா, நீங்க தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர், அப்படித்தான் முழங்குவேன் என உதயநிதி காதுபடவே உரிமையோடு கூறினார் அந்த நிர்வாகி. இதையடுத்து என்னமோ செய்யுங்க என்பதை போல் தன்னை வருங்கால முதலமைச்சர் என வாழ்த்தி எழுப்பிய முழக்கத்தை ரசிக்காமலேயே அங்கிருந்து நடையை கட்டினார் உதயநிதி ஸ்டாலின். எல்லா மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்ல குவிந்துவிட்டார்கள்.
நேரில் சென்ற துரைமுருகன்: அதேபோல் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு கூட்டமும் சற்று அதிகமாகவே இருந்தது. அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலின் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால் அரசு உயர் அதிகாரிகளும், காவல் துறை உயர் அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், நேற்று முன் தினமே தனது மகன் கதிர் ஆனந்துடன் நேரில் சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக புரோட்டகால்: பேராசிரியர் அன்பழகன் திமுக பொதுச்செயலாளராக இருந்தவரை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று தான் அப்போதைய இளைஞரணிச் செயலாளரும், இன்றைய திமுக தலைவருமான ஸ்டாலின் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் வாழ்த்து பெறுவார். ஆனால் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துக் கொண்டு கட்சியின் இளைஞரணி செயலாளர் பிறந்தநாளுக்கு வீடு தேடிச் சென்று வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications