அதிரடியாக கட்சி தொடங்கிய விஜய்.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை! ஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்று 'தமிழக வெற்றி கழகம்' எனும் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவரது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது குறித்து கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். 'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

 Udhayanidhi Stalin congratulated actor Vijay who started a political party called Tamizhaga Vetri Kazhagam

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்' ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்' மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியார்களிடம் கூறுகையில், "இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் தொங்க உரிமை இருக்கிறது. புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு எனது பாராட்டுக்கள். அவருடைய மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+