கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: நார்வே செஸ் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள பிரக்ஞானந்தாவுக்கும், அவரது சகோதரி வைஷாலிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடந்து வருகிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.

இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில், டிங் லிரெனிடம் தோல்வி கண்டார். இந்நிலையில், இன்று நடந்த மூன்றாவது சுற்றில் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இதில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா, அபாரமாக செயல்பட்டு கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.
இதே நார்வே செஸ் தொடரில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, கொனேரு ஹம்பி உள்ளிட்ட 6 பேர் பங்கேற்றனர். கிளாசிக்கல் ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர செஸ் வீராங்கனை ஹம்பியை வீழ்த்தினார் வைஷால்.
மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளார். அக்காவும் தம்பியும் நார்வே செஸ்ஸில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகித்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கும், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள வைஷாலிக்கும் தமிழக இளைஞர் நலன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"கிளாசிக்கல் செஸ் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தது மறக்க முடியாத சாதனை. அதேபோல், மகளிர் நார்வே செஸ் போட்டியில் முதன்முறையாக கிளாசிக்கல் சுற்றில் ஹம்பி கோனேருவை வைஷாலி தோற்கடித்தது மற்றொரு அசாதாரண சாதனை.
பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் தொடர்ந்து வெற்றி பெற்று நார்வேயில் சாம்பியன் பட்டம் வெல்ல வாழ்த்துகிறேன். அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications